Asianet News TamilAsianet News Tamil

வெள்ளைச் சர்க்கரை சாப்பிடுவதை நீங்கள் முழுவதும் நிறுத்தினால் உங்களுக்குள் உண்டாகும் மாற்றங்கள் இதோ...

What are changes happen if you leave eating sugar
What are changes happen if you leave eating sugar
Author
First Published Mar 5, 2018, 1:34 PM IST


 

வெள்ளைச் சர்க்கரை நாவை அடிமைப்படுத்தும் மிக மோசமான உணவுப் பொருட்களில் முக்கியமானது. பல நோய்களை உண்டாவதற்கு சர்க்கரைதான் காரணம். 

சர்க்கரையை சாப்பிடுவதை குறைத்தாலே உங்கள் ஆரோக்கியம் மேம்படும். பிஸ்கட்ஸ், சாஸ், இனிப்பு வகைகள், யோகார்ட் என பலவற்றிலும் சேர்ப்பவை வெள்ளை சர்க்கரை தான். 

இந்த வெள்ளைச் சர்க்கரையை சாப்பிடுவதை நீங்கள் முழுவதும் நிறுத்தினால் உங்களுக்குள் உண்டாகும் மாற்றங்கள் இதோ...

** பல்வேறு ஆபத்தான தாக்குதலிலிருந்து உங்கள் இதயம் பாதுகாக்கப்படுகிறது. 

** இன்சுலின் அதிகம் தூண்டபடாத நிலையில் ரத்த அழுத்தம் அதிகமாவது தடுக்கப்படுகிறது. இதனால் இதய துடிப்பு பல மடங்கு ஆவதும் தடுக்கப்படுகிறது. இதனால் இதயம் பல மடங்கு பலம் பெறுகிறது.      

** டீன் ஏஜ் வயதினர் சாப்பிடும் இனிப்புகள்தான் சருமத்திற்கு முதல் எதிரி. முகப்பரு, எண்ணெய் வடிதல் ஆகியவை இல்லாத சுத்த சருமம் வெளிப்படும். 

** இளம் வயதிலேயே வரும் முதிர்ச்சி தடுக்கப்படும்.      

** வெள்ளைச் சர்க்கரை அதிகம் சாப்பிடுபவர்களுக்கு அடிக்கடி மன உளைச்சல் மற்றும் மன தடுமாற்றம் உண்டாகும் என ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள். ஆனால் சர்க்கரையை சாப்பிடாமல் இருப்பவரகளுக்கு உங்கல் மன நிலையில் உள்ள முன்னேற்றம் மகிழ்ச்சியடைய வைக்கும்.      

** ஞாபக சக்தி அதிகரிக்கும். ஏனென்ரால் அதிக சர்க்கரை மூளைக்கு செல்லும் தகவ்ல் பரிமாற்ற சங்கிலியை உடைக்கும் ஆற்றல் கொண்டவை. இதனால் ஞாபக மறதி அடிக்கடி உண்டாகும். 

** நீங்கள் சர்க்கரையை குறைக்கும் போது உங்கள் மூளை செல்கள் பலம் பெறும். நரம்பு மண்டலம் ஆரோக்கியமாக செயல் புரியும்.    

** தொடர்ந்து 4, 5 மாதங்கள் சர்க்கரை சாப்பிடாதிருந்தால் உங்கள் எடை 4 கிலோ வரை குறைந்திருக்கும். ஏனென்றால் நீங்கள் சாப்பிடும் சர்க்கரை ஒரு நாளைக்கு 20 கலோரி அதிகமாக காரணம். 

Follow Us:
Download App:
  • android
  • ios