Want to get a belly-free stomach? Tips to get flat stomach in two weeks

தொப்பை வராமல் தடுத்து, தட்டையான வயிற்றை இரண்டே வாரங்களில் பெற உதவும் சில வழிகள் இதோ. இவற்றை தவறாமல் பின்பற்றி வந்தால், நிச்சயம் நல்ல மாற்றத்தைக் காணலாம். 

குறிப்பாக இவைகளை தொப்பை குறையும் வரை மட்டுமின்றி, குறைந்த பின்னரும் பின்பற்ற வேண்டும். 

சர்க்கரையை குறைக்கவும்

தொப்பை குறைந்து தட்டையான வயிற்றைப் பெற வேண்டுமானால், எடுத்துக் கொள்ளும் சர்க்கரையின் அளவைக் குறைக்க வேண்டும். ஏனெனில் சர்க்கரையின் அளவைக் குறைக்கும் போது, உடலில் தங்கியுள்ள கொழுப்பின் அளவும் குறையும். அதிலும் ஒரு மாதத்திற்கு தொடர்ந்து சர்க்கரையை உணவில் சேர்க்காமல் இருந்தால், நல்ல மாற்றம் தெரியும். குறிப்பாக பேக்கரி உணவுகள், ஜங்க் உணவுகள், ஐஸ் க்ரீம்கள் மற்றும் பால் போன்றவற்றை தவிர்க்க வேண்டும்.

காய்கறி மற்றும் பழங்களின் டயட்

விரைவில் தொப்பையைக் குறைக்க வேண்டுமானால், டயட்டில் காய்கறிகள் மற்றும் பழங்களை அதிகம் சேர்த்துக் கொள்ள வேண்டும். அதிலும் காய்கறிகளில் தக்காளி, பசலைக்கீரை போன்றவற்றையும், பழங்களில் ஆப்பிள் மற்றும் அன்னாசியையும் அதிகம் சாப்பிடுவது மிகவும் நல்லது.

உடற்பயிற்சி

எவ்வளவு வேலைப்பளு இருந்தாலும், தினமும் குறைந்தது 3-4 நிமிடம் உடற்பயிற்சி செய்து வந்தால், மன அழுத்தம் நீங்குவதுடன், வயிற்றில் தங்கியுள்ள கொழுப்புக்களும் கரைந்துவிடும். எனவே உங்களுக்குப் பிடித்த, உங்களால் முடிந்த உடற்பயிற்சிகளை காலையில் செய்து வாருங்கள்.

புரோட்டீன் உணவுகள்

உடலில் தங்கியுள்ள கொழுப்புக்களை புரோட்டீன்கள் தான் உடைக்கும். எனவே புரோட்டீன் உணவுகளை அதிகம் உட்கொண்டு வந்தால், கொழுப்புக்கள் உடைக்கப்பட்டு, உடலில் இருந்து வெளியேறி, உடல் சிக்கென்று இருக்கும். ஆனால் டயட்டில் மாற்றங்களை கொண்டு வரும் போது, மருத்துவரிடம் ஆலோசித்து பின் மேற்கொள்ள வேண்டும். ஏனெனில் தொப்பை குறைவதுடன், உடல் ஆரோக்கியமும் பாதுகாக்கப்படும். 

தண்ணீர் மற்றும் எலுமிச்சை

அதிகப்படியான வாய்வும் தொப்பை வருவதற்கு ஒரு காரணம். எனவே இத்தகைய பிரச்சனையை போக்கி, செரிமான மண்டலத்தை சீராக செயல்பட வைக்க, தினமும் காலையில் வெறும் வயிற்றில், வெதுவெதுப்பான நீரில் தேன் கலந்து குடிக்க வேண்டும். இப்படி தினமும் செய்து வந்தால், தொப்பை குறைந்து தட்டையான வயிற்றைப் பெறலாம்.