அவர் பேசியது லொட லொட இந்தியாக இருந்தாலும், விமானி ப்ரதீப் கிருஷ்ணனின் வேடிக்கையான பாணி இந்திப்பேச்சு பயணிகளை மகிழ்வித்தது மட்டுமல்லாமல், சீட் பெல்ட்களை அணிய தேவையான வழிமுறைகளையும் கூறினார்.

தமிழகத்தைச் சேர்ந்த விமானி பிரதீப் கிருஷ்ணனின் இந்தி அறிவிப்பு வட இந்தியர்களால் வைரலாக்கப்பட்டு வருகிறது.

இந்த வைரலான வீடியோவில், விமானி ப்ரதீப் கிருஷ்ணன் சிரித்தபடி, ‘‘அனைவருக்கும் வணக்கம், என் இந்தி மிகவும் அழகாக இருக்கிறது. எல்லோரும் புரிந்து கொள்வார்கள் என நினைக்கிறேன்’’ என்றுப் இந்தியில் தொடரும் அவர். ‘‘இன்று பாட்னாவில் இருந்து கிளம்புகிறோம் 3,000 அடி உயரத்தில் சிறிது படபடப்பு இருக்கும். டகடகா டகா என ஆடிடும். அது கொஞ்சம் கடினமாக இருக்கும். நீங்கள் உங்கள் சீட் பெல்ட்டை அணியவில்லை என்றால், அது ஒரு தொந்தரவாக இருக்கும்’’ என அவர் கூறினார்.

அவர் பேசியது லொட லொட இந்தியாக இருந்தாலும், விமானி ப்ரதீப் கிருஷ்ணனின் வேடிக்கையான பாணி இந்திப்பேச்சு பயணிகளை மகிழ்வித்தது மட்டுமல்லாமல், சீட் பெல்ட்களை அணிய தேவையான வழிமுறைகளையும் கூறினார். வீடியோவில், விமானி ப்ரதீப் கிருஷ்ணனின் தனித்துவமான இந்தி அறிவிப்பைக் கேட்டு விமானப் பணிப்பெண்ணால் கூட சிரிப்பை அடக்க முடியவில்லை

https://www.instagram.com/p/DNiOs_OyuQ5/?utm_source=ig_embed&utm_campaign=embed_video_watch_again

இந்த வீடியோவை விமானி பிரதீப் கிருஷ்ணன் தனது இன்ஸ்டாகிராம் கணக்கில் பகிர்ந்துள்ளார், இது சமூக ஊடகங்களில் காட்டுத்தீ போல பரவி வருகிறது. இந்த வீடியோ மில்லியன் கணக்கான முறை பார்க்கப்பட்டுள்ளது. 1 லட்சத்து 51 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் இதை லைக் செய்துள்ளனர். நெட்டிசன்கள் விமானி ப்ரதீப் கிருஷ்ணனின் இந்தி முயற்சிகளைப் பாராட்டி வருகின்றனர்.

ஒரு பயனர் , ‘‘கேப்டன், உங்கள் இந்தி மிகவும் அழகாக இருக்கிறது. பயணிகளுக்கு செய்தியை தெரிவிப்பது முக்கியம், அதை நீங்கள் வார்த்தைகளாலும் செயல்களாலும் செய்தீர்கள். உங்கள் செய்தியை அனைவரும் கவனித்திருப்பார்கள் என்று நான் நம்புகிறேன்’’ என்றும் மற்றொருவர், ‘‘உங்கள் இந்தி குஞ்சம் குஞ்சம், ஆனால் மிகவும் நன்றாக இருக்கிறது.நாங்களும் அந்த விமானத்தில் இருந்திருக்க வேண்டும்’’ என்று வருத்தம் தெரிவிக்கின்றனர்.