Asianet News TamilAsianet News Tamil

கோடையில் ஏற்படும் கண்கட்டியை போக்க இந்த எளிய வீட்டு மருத்துவத்தை பயன்படுத்தி பாருங்கள்...

Use this simple home remedy to get a glimpse of the summer
Use this simple home remedy to get a glimpse of the summer
Author
First Published Mar 27, 2018, 1:42 PM IST



கோடையில் ஏற்படும் கண்கட்டி கண்களின் இமைகளில் கட்டி போன்று உருவாகும். 

வலி, சிவந்து போதல், கண் பார்வை மங்குதால் ஆகியவை உண்டாகும்.

கண்கட்டிக்கு காரணம் என்ன?

இதற்கு உடலில் அதிகப்படியான சூடு, நீர் பற்றாக்குறை, ஊட்டச்சத்து குறைவு. சுகாதாரம் இல்லாமல் இருப்பது பல காரணங்கள் இவ்வாறு கண்கட்டி உருவாவத்ற்கு காரணம். தொற்றினாலும் உண்டாகும். சிலருக்கு அதில் நீர் கசிந்துகொண்டேயிருக்கும். 

இதற்கான தீர்வுகள்:

** தனியா விதை :

தனியா விதை கைப்பிடி எடுத்து 20 மி.லி நீரில் 20 நிமிடங்கள் கொதிக்கவிடுங்கள். பின் வெதுவெதுப்பாகியதும் வடிகட்டி , அந்த நீரினால் கண்களை கழுவலாம். தினமும் 3 முறை செய்து பார்த்தால் பலன் தெரியும்.

** கொய்யா இலை :

கொய்யா இலையை லேசாக சூடுபடுத்துங்கள் அதனை ஒரு மெல்லிய துணியினால் மூடி கண்களின் மேல் ஒத்தடம் கொடுங்கள். உருளைக் கிழங்கு தோல் : பலரால் உருளைக் கிழங்கு தோலை சீவி அதனை கண்கள் மீது 10 நிமிடங்கள் வைக்கவும். நல்ல பலன் தெரியும்.

** உப்பு :

உப்பை வெறும் வாணிலியில் சூடுபடுத்தி அதனை ஒரு துணியினால் கட்டி கண்கள் மீது ஒத்தடம் வைக்கவும். அல்லது வெதுவெதுப்பான நீரில் உப்பை கரைத்து அதனைக் கொண்டு கண்களை கழுவலாம்.

** வேக வைத்த முட்டை :

முட்டையை வேக வைத்து ஓட்டை பிரிக்காமலேயே கண்கள் மீது பொறுக்கும் சூட்டில் வையுங்கள். 5 நிமிடம் இப்படி செய்தால் வலி குறைந்து குணமாகும்.

** பாலாடை :

பாலாடை எடுத்து அதனை கண்கள் மீது பூசுங்கள். காய்ந்ததும் பாலினால் கண்களை துடைத்து பின் வெதுவெதுப்பான நீரில் கண்களை கழுவுங்கள்
 

Follow Us:
Download App:
  • android
  • ios