நமக்கு உடலில் ஏதேனும் பிரச்சனைகள் ஏற்பட்டால், நமது வீட்டில் உள்ள உணவுப் பொருட்கள் மூலமே அதை சரிசெய்துக் கொள்ளலாம். 

இதோ சில டிப்ஸ்:

1.. மெலிந்த உடல் உள்ளவர்கள், கற்கண்டை வெண்ணெயுடன் சேர்த்து நாற்பது நாட்கள் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், மெலிந்த உடல் பருமனாகும்.

2.. சளித் தொல்லையினால், தொண்டை கட்டிக்கொண்டு குரல் வராமல், கஷ்டப்படுபவர்கள் கற்பூர வல்லியின் சாறு எடுத்து, அதனுடன் பனங்கற்கண்டு சேர்த்துப் குடித்தால் நல்ல பலன் கிடைக்கும்.

3.. வயிற்றின் சுற்றளவு அதிகமாக இருப்பவர்கள், வெள்ளை வெங்காயத்தை நெய்யில் வதக்கி, அதனுடன் பனங்கற்கண்டு சேர்த்து காலை, மாலை என்று இரண்டு வேளைகளும் ஒரு தேக்கரண்டி சாப்பிட்டு வர வேண்டும்.

4.. கடுமையான மூட்டுவலிகள் மூலம் கஷ்டப்படுபவர்கள், சுக்கை நீர் விட்டு அரைத்து கொதிக்கவைத்து மூட்டுகளில் தடவினால், மூட்டுவலி விரைவில் குறைந்து விடும்.

5.. மூலம் பிரச்சனைகள் இருப்பவர்கள், கருணைக் கிழங்கை தொடர்ந்து வாரம் இரண்டு முறை உணவுடன் சேர்த்து சாப்பிட வேண்டும்.

6.. ஒரு டம்ளர் கொதிநீரில், 1 டேபிள் ஸ்பூன் தேனைக் கலந்து குடித்தால் 1/4 மணி நேரத்தில் வயிற்று வலி காணாமல் போய்விடும்.

7.. நன்றாக காய்ச்சிய பசும்பாலில் மஞ்சள், மிளகுப் பொடி பனங்கற்கண்டுஆகியவற்றை சேர்த்து இரவில் குடித்து வந்தால், வரட்டு இருமல் குணமாகும்.

8.. அடிக்கடி ஏப்பம் விடும் பிரச்சனைகள் இருந்தால், வேப்பம்பூவை தூள் செய்து 4 சிட்டிகை எடுத்து இஞ்சி சாறுடன் கலந்து சாப்பிட்டால் குணமாகும்.

9.. ஞாபக மறதி அதிகமாக இருப்பவர்கள், வல்லாரைக் கீரையை நிழலில் காயவைத்து பொடி செய்து, தினமும் ஒரு தேக்கரண்டி அளவு அந்தப் பொடியை சாப்பிட்டு வந்தால், நினைவாற்றல் அதிகரிக்கும்.

10.. பெண்களுக்கு மாதவிடாய் கோளாறுகள் ஏற்பட்டால், உலர் திராட்சைப் பழத்தை வெது வெதுப்பான தண்ணீரில் அரை மணி நேரம் ஊறவைத்து, பின் அதை காலையில் குடித்து வர வேண்டும். இதனால் மாதவிடாய்க் கோளாறுகள் மட்டுமின்றி இதய நோயும் குணமாகிவிடும்.