To prevent heart attack you need a gram of salt every day
நாள் ஒன்றுக்கு 7 கிராம் உப்பை உணவில் பயன்படுத்தினால் உடல் நலம் மேம்படும் என்று கனடாவில் உள்ள மக்மாஸ்பர் பல்கலைக்கழகத்தை சேர்ந்த பேராசிரியர் சலீம்யூசுப் தெரிவித்துள்ளார்.
நாள் ஒன்றுக்கு குறைந்தது 3 கிராம் சோடியம் உடலில் கலக்க வேண்டும்.
அதற்கு குறைந்தால் மாரடைப்பு ஏற்பட்டு இதயத்தின் செயல்பாடுகள் நின்று உயிரிழக்கும் அபாயம் ஏற்படும் என்றும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.
நாள் ஒன்றுக்கு 7.5 முதல் 12.5 கிராம் உப்பு எடுத்தால் தான் 3 அல்லது 5 கிராம் சோடியம் பெற முடியும்.
எனவே, 5 கிராம் உப்பு போதாது. எனவே கூடுதல் அளவில் உப்பு சேர்க்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.
அது குறித்து விளக்கங்களை ஐரோப்பிய இதய ஜேர்னல் பத்திரிகையில் அவர் வெளியிட்டுள்ளார்.
அதே நேரத்தில் அளவுக்கு அதிகமாக உப்பு சேர்த்தால் உடல் நலம் பாதிக்கும் என்றும் அதில் தெரிவித்துள்ளார்.
எனவே, தேவையான அளவு சோடியம் இருக்கும் உப்பை தேர்ந்தெடுத்து சாப்பிடுங்கள்.
அஜினமோட்டோ போன்ற சீன உப்புகளை பயன்படுத்துவதை முற்றிலும் தவிர்த்து விடுங்கள்.
அப்போதுதான் மாரடைப்பில் இருந்து உங்களை நீங்களே தற்காத்து கொள்ள முடியும்.
