Asianet News TamilAsianet News Tamil

குளிர்காலத்தில் ஏற்படும் மலச்சிக்கலை போக்க 5 சூப்பர் உணவுகள்..!!

சீசனுக்கு ஏற்றவாறு நமது உணவுப் பழக்கவழக்கம் அமைய வேண்டும். அதை முறையாக பின்பற்ற தவறினால், மலச்சிக்கல் மற்றும் பிற வயிறு தொடர்பான பிரச்சினைகள் ஏற்படலாம்.
 

to get rid of winter constipation have these 5 superfoods
Author
First Published Dec 1, 2022, 3:09 PM IST

தமிழகத்தில் இன்னும் ஒரீரு மாதங்களுக்கு குளிர்காலம் தான் நிலவும். விரைவில் அதற்கு தகுந்தவாறான உணவுப் பழக்கங்களை வழக்கமாக்கிக் கொள்ளுங்கள். போதிய அளவு தண்ணீர் குடிக்காமல் இருப்பதும், காபி, டீ போன்றவற்றை அதிகமாக உட்கொள்வதும் குளிர்காலத்தில் மலச்சிக்கலை ஏற்படுத்தலாம். வானிலை குளிர்ச்சியாக இருப்பதால் தாகம் எடுக்காது, தண்ணீர் உட்கொள்ளும் எண்ணம் இருக்காது. எனினும், நாம் தண்ணீரை வேண்டிய அளவு பருகவேண்டும். சாலடுகள் போன்ற நார்ச்சத்துள்ள உணவுகளை நாம் வழக்கமாக உட்கொள்வது நல்ல பலனை தரும். இதன்மூலம் மலச்சிக்கல் இருக்காது. மேலும் பழங்கள் மற்றும் காய்கறிகளை உணவில் அதிகம் சேர்த்துக்கொள்வதும் குளிர்காலத்தில் ஏற்படும் மலச்சிக்கலுக்கு தீர்வாக அமையும். இந்த குளிர்கால மாதங்களில் மலச்சிக்கல் மற்றும் பிற குடல் ஆரோக்கியம் தொடர்பான பிரச்சனைகளைத் தவிர்க்க உதவும் ஐந்து சூப்பர் உணவுகள் குறித்து தெரிந்துகொள்ளலாம்.

பேரிச்சை

வைட்டமின்கள் சி, பி1, பி2, பி3, மற்றும் பி5, கால்சியம், இரும்பு, பொட்டாசியம், பாஸ்பரஸ், மெக்னீசியம் மற்றும் துத்தநாகம் போன்ற ஊட்டச்சத்துக்கள் பேரிச்சம்பழத்தில் நிறைந்துள்ளன. நார்ச்சத்து இருப்பதால், மலச்சிக்கல் பிரச்சனைக்கு பேரிச்சம்பழம் ஒரு சிறந்த தீர்வாகும். உடலுக்கு வேண்டிய ஊட்டச்சத்துக்கள் கிடைக்க, பேரிச்சையை ஒரு இரவு முழுவதும் தண்ணீரில் ஊறவைத்து, அடுத்தநாள் காலையில் சாப்பிடுவது நல்ல பலனை தரும்.

வெந்தயம்

ஒரு ஸ்பூன் வெந்தயத்தை இரவு முழுவதும் ஊறவைத்து, காலையில் முதலில் சாப்பிடவும். அவை அனைத்து வகையான செரிமான பிரச்சனைகளையும் குறைக்க உதவுகின்றன. அவற்றையும் அரைத்து, பொடியாக செய்து தண்ணீரில் கலக்கி பருகுவதும் உடலுக்கு பல்வேறு வகையில் உதவும்.

நெய்

நெய் மலச்சிக்கலை நீக்குகிறது மற்றும் அமிலத்தன்மை போன்ற செரிமான பிரச்சனைகளுக்கு தீர்வாக உள்ளது என்று பல ஆய்வுகள் காட்டுகின்றன. வைட்டமின் ஏ, டி, ஈ மற்றும் கே போன்ற கொழுப்பில் கரையக்கூடிய வைட்டமின்களை உறிஞ்சுவதற்கு தேவையான ஆரோக்கியமான கொழுப்பை உடலில் பராமரிக்க நெய் பெரிதும் உதவுகிறது.

ஆண்களில் விறைப்புத்தன்மை குறைபாட்டிற்கான நான்கு அடிப்படை தீர்வுகள்..!!

நெல்லி

இதை வெறும் வயிற்றில் தொடர்ந்து சாப்பிட்டு வர, மலச்சிக்கல், முடி உதிர்தல் மற்றும் எடை இழப்பு உள்ளிட்ட பல நன்மைகள் ஏற்படுகின்றன. குறிப்பாக மரநெல்லிக்காயில் நிறைய சத்துக்கள் காணப்படுகின்றன. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் இந்நெல்லிக்காயை சாப்பிடலாம்.

திராட்சை

திராட்சை: திராட்சை நீண்ட காலமாக மலச்சிக்கலுக்கு மருந்தாக பயன்படுத்தப்படுகிறது. அவை நார்ச்சத்து நிறைந்தவை மற்றும் செரிமான செயல்முறைக்கு உதவுகின்றன. திராட்சையை ஒரே இரவில் ஊறவைத்து, அதே தண்ணீரில் பிசைந்து, வெறும் வயிற்றில் முழுவதையும் குடிப்பதன் மூலம், உடனடியாக பலன் கிடைக்கும்.
 

Follow Us:
Download App:
  • android
  • ios