This is what you say to avoid milking in the morning ...

காலை உணவாக பாலை குடிக்கக் கூடாது ஏன்?

பாலில் புரோட்டீன், கால்சியம், விட்டமின், பொட்டாசியம், மக்னீசியம் போன்ற சத்துக்கள் ஏராளமாக நிறைந்துள்ளது. ஆனால் காலை உணவாக பாலை மட்டும் குடிப்பதை தவிர்த்து, சரிவிகித உணவுகளை எடுத்துக் கொள்வது மிகவும் நல்லது.

ஏனெனில் பால் குடித்தால் மட்டும் நமக்கு அனைத்து சத்துக்களும் கிடைத்து விடாது. எனவே பாலை அதிகமாக எடுத்துக் கொள்வதை தவிர்த்தால், பல்வேறு உடல் உபாதைகள் ஏற்படாமல் தடுக்கலாம்.

காலை உணவில் கார்போஹைட்ரேட், புரோட்டீன்ஸ் போன்ற சத்துக்கள் அவசியம் இருக்க வேண்டும். ஏனெனில் நீண்ட நேரம் இடைவேளி இருப்பதால், மூளைக்கு குளோக்கோஸ் தேவைப்படும். எனவே காலையில் வெறும் பாலை மட்டும் உணவாக எடுத்துக் கொள்வதை தவிர்க்க வேண்டும்.

பால் குடிப்பதால் ஏற்படும் ஆபத்து?

உணவிற்கு பதிலாக தொடர்ந்து பாலை மட்டும் காலை உணவாக எடுத்துக் கொண்டால் நம் உடலில் இரும்புச்சத்து குறைபாடு மற்றும் ரத்த சோகை போன்ற பிரச்சனைகள் ஏற்படும்.

பாலில் உள்ள அமினோ ஆசிட், உறக்கத்திற்கு உதவும் ஹார்மோனை அதிகமாகச் சுரக்கச் செய்து, அதிக உறக்கத்தை ஏற்படுத்தும். எனவே காலை உணவாக பாலை குடிக்கக் கூடாது.

பால் மட்டும் குடித்தால் கால்சியம் சத்துக்கள் அதிகம் கிடைக்கும் என்பது தவறானது. ஆனால் பாலை விட ராகி, ராஜ்மா, சோயாபீன்ஸ் போன்ற உணவுப் பொருட்களில் கால்சியம் பன்மடங்கு அதிகம் நிறைந்துள்ளது.

நம் உடலுக்கு கால்சியம் சத்துக்கள் வேண்டுமெனில், அதற்கு விட்டமின் D சத்துக்களும் மிக அவசியம். எனெனில் விட்டமின் D சத்துக்கள் தான் நம் உடலில் கால்சியத்தை சரியாக சேர்க்க உதவுகிறது.

எலும்புகளின் வலிமையை அதிகரிக்க பால் மட்டும் போதாது. ஏனெனில் எலும்பு முறிவுகளின் போது அதை சேர்க்கும் தனித்துவமான சத்துக்கள் பாலில் கிடையாது.