Asianet News TamilAsianet News Tamil

Liver Protection: உங்கள் கல்லீரலைப் பாதுகாக்கும் சூப்பரான உணவுகள் இவை தான்!

சில உணவுகளை எடுத்துக் கொண்டால் கல்லீரல் ஆரோக்கியத்தை மேம்படுத்தலாம். அப்படிப்பட்ட உணவுகளைத் தான் நாம் இங்கு காணப் போகிறோம்.

These are the super foods that protect your liver!
Author
First Published Oct 30, 2022, 10:48 PM IST

தினசரி நாம் உட்கொள்ளும் புரதங்கள், கார்போஹைட்ரேட்டுகள் மற்றும் கொழுப்புகள் என அனைத்தும் கல்லீரலால் நிர்வகிக்கப்படுகிறது. பொதுவான உடல் ஆரோக்கியத்திற்கு கல்லீரல் ஆரோக்கியம் மிகவும் அவசியம். ஆரோக்கியமற்ற கல்லீரலின் காரணத்தால், வளர்சிதை மாற்ற பிரச்சனைகள் மற்றும் கல்லீரல் நோய் ஏற்பட வாய்ப்புள்ளது. டைப் 2 நீரிழிவு, கல்லீரல் பாதிப்பை ஏற்படுத்தும் பொதுவான காரணியாக உள்ளது. சில உணவுகளை எடுத்துக் கொண்டால் கல்லீரல் ஆரோக்கியத்தை மேம்படுத்தலாம். அப்படிப்பட்ட உணவுகளைத் தான் நாம் இங்கு காணப் போகிறோம்.

கல்லீரலைப் பாதுகாக்கும் திராட்சை விதைச் சாறு

திராட்சையில் காணப்படும் மிகப் பிரபலமான ஆரோக்கிய தாவர இரசாயனம் தான் ரெஸ்வெராட்ரோல் (resveratrol). ஆய்வு முடிவுகளின்படி, இவை வீக்கத்தை குறைக்கலாம். மேலும், மற்ற பலன்களுடன் ஆக்ஸிஜனேற்ற அளவை அதிகரிக்கலாம். முழு திராட்சையையும் சாப்பிடுவதைக் காட்டிலும், திராட்சை விதைச் சாறு உடலுக்கு மிக நல்லது. எனவே, கல்லீரலின் ஆரோக்கியத்தை ஆதரிக்க திராட்சை விதைச் சாறு கூடுதலாக பரிந்துரைக்கப்படுகிறது.

பச்சை இலை காய்கறிகள்

கல்லீரலின் ஆரோக்கியத்தை மேம்படுத்த விரும்பினால், உங்களின் உணவுப் பட்டியலில் பச்சை இலை காய்கறிகளுக்கு அவசியம் இடம் கொடுத்தாக வேண்டும்‌. இலை கீரைகளில் உள்ள குளுதாதயோன், ஒரு சக்தி மிகுந்த ஆக்ஸிஜனேற்ற, ஆரோக்கியமான கல்லீரல் செயல்பாட்டை ஆதரிக்க உதவி புரிகிறது. சில ஆராய்ச்சி முடிவுகளின் படி, ப்ரோக்கோலி உட்கொண்டால், ஆல்கஹால் அல்லாத கொழுப்பு கல்லீரல் நோயிலிருந்து பாதுகாத்துக் கொள்ள முடியும்.

Chapathi Noodles : குழந்தைகள் விரும்பி சாப்பிடும் சப்பாத்தி நூடுல்ஸ்!

பெர்ரி

புளுபெர்ரி மற்றும் கிரான்பெர்ரி ஆகிய இரண்டிலும் ஆன்டிஆக்ஸிடன்ட்களான அந்தோசயினின்கள் காணப்படுகிறது. இவை பல்வேறு ஆரோக்கிய பலன்களுடன் இணைக்கப்பட்டுள்ளது. இந்தப் பழங்களை சாப்பிடும் போது கல்லீரலை பாதிப்பில் இருந்து பாதுகாக்க முடியும். அவுரிநெல்லிகள் ஆக்ஸிஜனேற்ற என்சைம்களின் செயல்பாடு மற்றும் நோயெதிர்ப்பு உயிரணு வினைத்திறன் ஆகிய இரண்டையும் மேம்படுத்துகிறது.

காஃபி

கல்லீரல் செயல்பாட்டை ஆதரிக்க நீங்கள் உட்கொள்ளக்கூடிய ஆரோக்கியமான மற்றும் மிக முக்கியமான பானங்களில் ஒன்று காஃபி. நாள்பட்ட கல்லீரல் நோயால் அவதிப்படுபவர்கள், காஃபி உட்கொண்டால் கல்லீரல் இழைநார் வளர்ச்சியின் (cirrhosis) வாய்ப்பை குறைக்கும் அல்லது மீள முடியாத கல்லீரல் பாதிப்பைக் குறைக்கலாம்.

காபி நுகர்வால் கல்லீரல் நோய் மற்றும் வீக்கத்தில் நன்மை உண்டாகும். இதுதவிர, காஃபி ஒரு கல்லீரல் புற்றுநோய் வருவதற்கான வாய்ப்பை குறைக்கவும் உதவுகிறது. நாள்பட்ட கல்லீரல் நோய் பாதிப்பில் உள்ளவர்கள், தினசரி குறைந்தது 3 கப் காஃபி உட்கொண்டால் அதிக நன்மைகளைப் பெற முடியும்.

குழந்தைகள் விரும்பி சாப்பிடக் கூடிய வெஜிடபிள் சீஸ் தோசை!!!

ஓட்ஸ்

உணவில் நார்ச்சத்தை அதிகரிக்க ஓட்ஸ் உதவுகிறது. இதில் காணப்படும் குறிப்பிட்ட நார்ச்சத்து, குறிப்பாக கல்லீரலுக்கு நன்மை அளிக்க வல்லது. செரிமானத்தின் முக்கிய அங்கம் நார்ச்சத்தாகும். ஓட்ஸ் நோய் எதிர்ப்பு மண்டலத்திற்கு உதவி புரிவதோடு, வீக்கத்தையும் குறைக்கிறது. இன்ஸ்டண்ட் ஓட்மீலில் மாவு அல்லது சர்க்கரை போன்ற சேர்க்கைகள் இருக்கலாம் என்பதால், அவை உடலுக்கு தீங்கு விளைவிக்கும் என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும்.

Follow Us:
Download App:
  • android
  • ios