Tamil

குளிர்கால சரும வறட்சிக்கு முற்றுப்புள்ளி

Tamil

மாய்ஸ்சரைசரை தவறாமல் பயன்படுத்துங்கள்

குளிர்காலத்தில் சருமத்தின் ஈரப்பதம் விரைவில் குறைகிறது. எனவே, குளித்த பிறகும், இரவில் தூங்குவதற்கு முன்பும் திக்கான மாய்ஸ்சரைசர் அல்லது பாடி லோஷன் பயன்படுத்துவது மிகவும் அவசியம்.

Image credits: storyblocks
Tamil

சூடான நீரில் குளிப்பதைத் தவிர்க்கவும்

அதிக சூடான நீர் சருமத்தில் உள்ள இயற்கையான எண்ணெய்களை நீக்கிவிடும். எனவே, வெதுவெதுப்பான நீரில் குளிப்பது சருமத்திற்கு நன்மை பயக்கும்.

Image credits: Freepik
Tamil

மென்மையான சோப்பைப் பயன்படுத்துங்கள்

இரசாயனங்கள் மற்றும் அதிக நுரை கொண்ட சோப்புகள் சருமத்தை மேலும் வறட்சியாக்கும். மைல்டான, மூலிகை அல்லது மாய்ஸ்சரைசிங் சோப்பைப் பயன்படுத்துவது நல்லது.

Image credits: Getty
Tamil

நிறைய தண்ணீர் குடியுங்கள்

குளிர்காலத்தில் தாகம் குறைவாக இருக்கும், ஆனால் உடலில் நீர் குறைந்தால் சருமம் வறண்டுவிடும். தினமும் குறைந்தது 7-8 கிளாஸ் தண்ணீர் குடிப்பது அவசியம்.

Image credits: pexels
Tamil

உணவில் கவனம் செலுத்துங்கள்

ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் உள்ள உணவுகள் (வால்நட், ஆளி விதைகள்), பச்சை காய்கறிகள் மற்றும் பழங்கள் சருமத்திற்கு உள்ளிருந்து ஊட்டமளிக்கும்.

Image credits: freepik
Tamil

இரவு நேர சருமப் பராமரிப்பைப் பின்பற்றுங்கள்

தூங்குவதற்கு முன் முகத்தை சுத்தம் செய்து, நைட் க்ரீம் அல்லது தேங்காய் எண்ணெய், பாதாம் எண்ணெய் தடவினால் சருமம் மென்மையாகவும் பொலிவாகவும் இருக்கும்.

Image credits: Social Media

கூந்தல் வளர்ச்சிக்கு அரிசி நீர் செய்யும் அற்புத நன்மைகள்

குளிர்காலத்தில் சருமத்தை பராமரிக்க சூப்பர் டிப்ஸ்!!

முகம் எப்போதும் பளபளப்பாக- தினமும் இதை மறக்காம செய்ங்க

முகச் சுருக்கங்களை நீக்கி இளமையாக மாற்றும் ஓட்ஸ் ஃபேஸ் பேக்