Chapati Noodles : குழந்தைகள் விரும்பி சாப்பிடும் சப்பாத்தி நூடுல்ஸ்!
குழந்தைகள் விரும்பி சாப்பிடும் சப்பாத்தி நூடுல்ஸ் செய்யலாம் வாங்க!
குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த உணவு பட்டியலில் நூடுல்ஸ் நிச்சயமாக இடம் பெற்று இருக்கும்.பொதுவாக நாம் நூடுல்ஸ்ஸை இரவு நேரங்களில் வெளியில் சென்று பாஸ்ட் ஃபுட் அல்லது ஹோட்டல்களில் சென்று ஆர்டர் செய்து தான் சாப்பிடுவோம். அவ்வாறு சாப்பிடாமல் நாமே வீட்டில் சப்பாத்தி நூடுல்ஸ் செய்த சாப்பிடலாமா? கோதுமையில் செய்யப்படுகின்ற சப்பாத்தியாழ் நமது உடல் வலிமையும் , ஆரோக்கியத்தையும் பெறுகிறது. இது நமது உடலுக்கு தீங்கும் விளைவிக்காது .இன்றைய பதிவில் சுவையான சப்பாத்தி நூடுல்ஸ் எப்படி செய்வது என்று தெரிந்து கொள்ள போகிறோம்.
குழந்தைகள் விரும்பி சாப்பிடும் சப்பாத்தி நூடுல்ஸ் செய்யலாம் வாங்க!
குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த உணவு பட்டியலில் நூடுல்ஸ் நிச்சயமாக இடம் பெற்று இருக்கும். எக் நூடுல்ஸ், சிக்கன் நூடுல்ஸ்,வெஜ் நூடுல்ஸ் என்று எதை கொடுத்தாலும் உள்ளன. விரும்பி சாப்பிடுவர். வழக்கமாக நாம் நூடுல்ஸ்ஸை இரவு நேரங்களில் வெளியில் சென்று பாஸ்ட் ஃபுட் அல்லது ஹோட்டல்களில் சென்று ஆர்டர் செய்து தான் சாப்பிடுவோம். அதன் சுவையும் நிறமும் நமக்கு தீங்கு விளைவிக்குமே தவிர வேறு எந்த பயனும் தருவதில்லை. அந்த வகையில் இன்று நாம் ஆரோக்கியத்தை பரிசாக தரும் சப்பாத்தியை வைத்து சப்பாத்தி நூடுல்ஸ் செய்யலாம் வாங்க!
குழந்தைகள் சப்பாத்தி சாப்பிட மறுக்கிறார்களா? அப்படியென்றால் இந்த மாதிரி செய்து தாருங்கள். மிச்சமில்லாமல் சாப்பிட்டு முடிப்பார்கள். கோதுமையில் செய்யப்படுகின்ற சப்பாத்தியால் நமது உடல் வலிமையும்,ஆரோக்கியத்தையும் பெறுகிறது. இது நமது உடலுக்கு தீங்கும் விளைவிக்காது .இன்றைய பதிவில் சுவையான சப்பாத்தி நூடுல்ஸ் எப்படி செய்வது என்று தெரிந்து கொள்ள போகிறோம்.
தேவையான பொருட்கள்:
சப்பாத்தி- 4 பீஸ்
பெரிய வெங்காயம் 1(பொடியாக நறுக்கியது )
முட்டை கோஸ் 1 (மெல்லிதாக நறுக்கியது)
குடை மிளகாய் 1(மெல்லிதாக நறுக்கியது)
கேரட்-1 (துருவியது)
மிளகாய் -3 (பொடியாக நறுக்கியது)
பூண்டு- 5 பல் (பொடியாக நறுக்கியது)
இஞ்சி பூண்டு விழுது -1 ஸ்பூன்
மிளகாய் தூள் 1 ஸ்பூன்
மிளகு தூள் 1 ஸ்பூன்
சோயா சாஸ் 1 ஸ்பூன்
உப்பு தேவையான அளவு
எண்ணெய் தேவையான அளவு
குழந்தைகள் விரும்பி சாப்பிடக் கூடிய வெஜிடபிள் சீஸ் தோசை!!!
செய்முறை:
முதலில் சப்பாத்தியை நூடுல்ஸ் போன்று நீட்ட நீட்டமாக மிக மெல்லிதாக வெட்டி கொள்ள வேண்டும் அடுத்து அடுப்பில் ஒரு கடாய் வைத்து அதில் சிறிது எண்ணெய் ஊற்றிக் கொள்ள வேண்டும். எண்ணெய் காய்ந்த பின்பு பொடியாக நறுக்கி வைத்துள்ள வெங்காயம் மற்றும் பூண்டு பற்களை போட்டு நன்றாக வதக்கிக் கொள்ள வேண்டும்.
வெங்காயம் கண்ணாடி பதம் போல் வதங்கியவுடன் அதில் துருவி வைத்துள்ள கேரட் சேர்த்து கிளறி விட வேண்டும்.பின் அதில் வெட்டி வைத்துள்ள கோஸ் மற்றும் குடைமிளகாய் சேர்த்து வதக்கி கொள்ள வேண்டும். அனைத்தும் அரை வேக்காடாக வெந்த பின்அதில் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து அதன் வாசனை செல்லும் வரை நன்றாக வதக்கி விட வேண்டும்.
பின் இதில் உப்பு மற்றும் சோயா சாஸ் சேர்த்து வதக்கி விட வேண்டும். பின் மிளகாய் தூள் மற்றும் மிளகுத்தூள் சேர்த்து நன்றாக கிளறி விட்டு சுமார் ஒரு நிமிடம் நன்றாக கிளறி விட வேண்டும். இறுதியாக நாம் இப்போது இதில் நூடுல்ஸ் போல் மெல்லிதாக வெட்டி வைத்துள்ள சப்பாத்தியை சேர்த்து நன்றாக கிளறி விட வேண்டும்.அவ்ளோதான் குழந்தைகள் விரும்பி சாப்பிடும் ஸ்பைசியான கலர்புல்லான மற்றும் ஆரோக்கியமான சப்பாத்தி நூடுல்ஸ் ரெடி!