There are so many medical benefits in half a ceiling.

1.. அரைக் கீரையுடன், சுக்கு, இஞ்சி, மிளகு, மஞ்சள் ஆகியவற்றைச் சேர்த்து கஷாயம் செய்து சாப்பிட்டால் குளிர் சன்னி, வலிப்பு நோய் போன்றவை குணமாகும்.

2.. அரைக்கீரையுடன், மிளகாய் வற்றல், சிறு பருப்பு, மிளகு ஆகியவற்றைச் சேர்த்துக் கொதிக்கவைத்து, சாற்றை வடித்து, சாதத்தில் கலந்து, காய்ச்சல் உள்ளவருக்குக் கொடுத்தால், காய்ச்சல் உடனே மறையும்.

3.. அரைக்கீரைத்தண்டுடன் மிளகு, மஞ்சள் சேர்த்து கஷாயம் தயாரித்து, தினமும் அதிகாலையில் சாப்பிட்டால் சளி, இருமல் மற்றும் நுறையீரல் தொடர்பான கபநோய்கள் குணமாகும்.

4.. அரைக்கீரையை சிறு பருப்பு சேர்த்து தொடர்ந்து 21 நாட்கள் சாப்பிட்டால் உடலில் ரத்த உற்பத்தி அதிகரித்து ரத்தசோகை மறையும்.

5.. அரைக்கீரை வேர், நில வேம்பு, சிறிது மஞ்சள் மூன்றையும் சேர்த்துக் கஷாயம் தயாரித்து வாய் கொப்பளித்தால் பல்வலி, பல் கூச்சம் போன்ற பல் சம்பந்தமான நோய்கள் குணமாகும்.

6.. அரைக்கீரைச் சாற்றில் மிளகை ஊறவைத்து உலர்த்தித் தூளாக்கி தினமும் 5 சிட்டிகை அளவில் தேனில் குழைத்துச் சாப்பிட்டால் கை, கால் நடுக்கம், நரம்புத் தளர்ச்சி போன்றவை சரியாகும்.

7.. அரைக்கீரைச் சாற்றில் சீரகத்தை ஊறவைத்து உலர்த்தி எடுத்து, பிறகு எலுமிச்சைச்சாற்றில் ஊறவைத்து உலர்த்தி எடுத்து தூளாக்கிக்கொள்ளவும். காலை, மாலை இரு வேளையும் 2 கிராம் அளவில் (அரை ஸ்பூன்) சாப்பிட்டால் வாத, பித்த, கப அதிகரிப்பால் ஏற்படும் பாதிப்புகள் முற்றிலும் குணமாகும்.

8.. அரைக்கீரைச் சாறெடுத்து, அதில் வெந்தயத்தை ஊறவைத்து அரைத்து, தலையில் தேய்த்துக் குளித்து வர, பேன், பொடுகு, நீங்கி முடி நன்கு வளரும்.

9.. அரைக்கீரைச் சாறில் ஒரு கிராம் ஏலரிசியை (ஏலக்காய் விதை) சேர்த்து அரைத்துச் சாப்பிட்டால் ரத்தம் சுத்தமாகும்.

10.. அரைக்கீரை சாப்பிட்டால் வயிற்றுக்கும் மிக நல்லது.