The reason dengue is biting mosquitoes during morning

 பகல் நேரத்தில் கடிக்கும் கொசுக்களால் டெங்கு வருகிறது. இதன் அறிகுறிகள் தொடர்ந்து, மூன்று நாட்களுக்கு காய்ச்சல் குறையாமல் இருந்து, திடீரென்று சரியாகி விடும்.

பாதிப்பு அதிகமானால் தோலில் தடிப்பு, ரத்தம் கசிவது,வயிற்று வலி, உடல் வலி, சிறுநீர் குறைவாக வெளியேறுவது, ரத்த அழுத்தம் குறைவாக இருப்பது போன்ற பிரச்னைகள் வரும்.

காய்ச்சல் வந்த 24 மணி நேரத்திற்குள், 'என்.எஸ்.1ஆன்டிஜென்' என்ற பரிசோதனையை செய்தால், டெங்கு இருப்பது உறுதியாகும்.

பொதுவாக எந்த வைரஸ் கிருமி உடலினுள் நுழைந்தாலும், அது ரத்தத்தில் பெருகி வளர்வதற்கு, குறைந்தது மூன்று நாட்கள் வரை ஆகலாம். ஆனால், டெங்குவைப் பொறுத்தவரை, 2008ல் அறிமுகமான என்.எஸ்.,1 என்ற நவீன பரிசோதனையில்,காய்ச்சல் வந்த, 24 மணி நேரத்தில் டெங்கு பாதிப்பு உள்ளதா என்பதை உறுதி செய்துவிட முடியும். காய்ச்சல் வந்த மூன்று நாட்களுக்குப் பின், ஐ.ஜி.எம்.,என்ற பரிசோதனை செய்தும் உறுதி செய்யலாம்.மருத்துவர் சொல்லும் ஆலோசனையின் பெயரிலேயே மருந்து மாத்திரைகள் எடுத்துக்கொள்ள வேண்டும்.

ரக்த சோகையால் இதயம் செயலிழக்குமா?.

உடல் முழுவதும் ஆக்ஸிஜனை கடத்த உதவும் ரத்த சிவப்பணுக்கள் புரதமும் இரும்பும் சேர்ந்தது, 'ஹீமோகுளோபின்!' இந்த சத்துக்கள் குறைவதால் ஏற்படுவதே ரத்த சோகை.

அன்றாட உணவில் போதிய அளவு இரும்புச் சத்து இல்லாமல் இருப்பது, பெருங்குடலில் இருக்கும் நாடாப்புழு இரும்புச் சத்தை உறிஞ்சிக் கொள்வது,சாப்பிடும் உணவில் உள்ள இரும்புச் சத்தை உடல் கிரகிக்க முடியாமல் போவது, எலும்பு மஜ்ஜை பாதிப்பு,மாதவிடாய் கோளாறுகளால் அதிக ரத்தப் போக்கு போன்றவை முக்கிய காரணங்கள். இதுதவிர, பிரதான காரணம், பி12 வைட்டமின் குறைபாடு.

ரத்தத்தில் உள்ள சிவப்பணுக்கள் என்பதில்லை. உடலில் எந்த ஒரு செல் வளர வேண்டும் என்றாலும் அதன் வளர்ச்சி ஊக்கி, வைட்டமின் பி12. வைட்டமின் பி12 குறைபாடு இருந்தாலும், ரத்த சிவப்பணுக்கள் போதுமான அளவு வளராமல் ரத்த சோகை ஏற்படும்.

மயக்கம், சோர்வு, உடல் வெளுத்து காணப்படுவது,நகங்களில் குழி விழுதல், நாக்கு வெளுத்து இருத்தல்,மூச்சு விடுவதில் சிரமம், இதயத் துடிப்பு அதிகரிப்பு,குளிர்ச்சியான சூழலைத் தாங்க முடியாமை போன்றவையே. ரத்த சோகையால் கர்ப்பிணிகளுக்கு 


பிரசவத்தின் போது ஏற்படும் அதிகப்படியான ரத்த இழப்பு, ரத்த சோகை இருந்தால், உயிருக்கே ஆபத்தாக முடியலாம். தாய்க்கு ரத்த சோகை இருந்தால் குழந்தை குறை பிரசவத்திலும், குறைவான எடையுடனும் பிறக்கும் வாய்ப்பிருக்கிறது. குழந்தைக்கும் ரத்த சோகை ஏற்படலாம்.

ரத்த சோகையின் காரணமாக, ரத்தத்தில் எடுத்து செல்லப்படும் ஆக்சிஜனின் அளவு குறைவதால், அதிக ஆக்சிஜனுக்காக இதயம் அதிகமாக ரத்தத்தை, 'பம்ப்'செய்ய வேண்டியிருக்கும். இது தொடரும் பட்சத்தில்,இதயம் செயலிழக்கக் கூடும்.

வைட்டமின் பி12 குறைபாட்டால் ஏற்படும் ரத்த சோகையில், நரம்புகள் சேதம் அடையும் வாய்ப்பு இருக்கிறது. நரம்புகளின் ஒழுங்கான செயல்பாட்டிற்கு,வைட்டமின் பி12 போதுமான அளவில் இருப்பது அவசியம். 

அதிக ஆண்டுகள் சைவ உணவுகளையே சாப்பிடுபவர்களுக்கு வர வாய்ப்பிருக்கிறது. காரணம்,வைட்டமின் பி12 பெரும்பாலும் அசைவ உணவுகளில் தான் கிடைக்கும். 
ரத்த சோகை இருப்பது, சாதாரண ரத்த பரிசோதனையின் மூலமே தெரிந்து விடும். 

ரத்த சோகைக்கான காரணத்தை தெரிந்து, டாக்டரின் ஆலோசனைப்படி, இரும்புச் சத்து மாத்திரைகளை எடுத்துக் கொள்ள வேண்டும்.
உணவில் அதிக இரும்புச் சத்துள்ள கீரை வகைகள்,பழங்கள், முழு தானியங்களுடன் சேர்த்து, போதுமான அளவு புரதச் சத்துள்ள உணவையும் சாப்பிடுவதுஅவசியம்.