The pepper has the power to feed the poison in the food

உலகின் தலைசிறந்த Antidote மிளகு. இது இந்தியாவில் மிக அதிகமாக பயிரிடப்படுகிறது. தரம் வாய்ந்த நல்ல மிளகு தென்னிந்தியாவில் மட்டுமே கிடைக்கிறது.

மிளகிற்கு வீக்கத்தைக் குறைக்கும் பண்பும், வாதத்தை அடக்கும் பண்பும், பசியைத் தூண்டும் பண்பும், வெப்பத்தைக் குறைக்கும் பண்பும், கோழையை அகற்றும் பண்பும், பூச்சிக்கொல்லியாக செயல்படும் பண்பும் உள்ளது.

நரம்புத்தளர்ச்சி, கை கால் நடுக்கம், உதறல், ஞாபக சக்தி குறைபாடு, முதுமையில் உண்டாகும் மதிமயக்கம், இவற்றிற்கு நல்ல மிளகு சிறந்த மருந்தாகும். வீரியத்தை அதிகரிக்கும் தன்மையும் இதற்குண்டு.

உணவு சரியான முறையில் செரிக்கப் பட்டால் தான் வாயுத் தொந்தரவு இருக்காது. மேலும் நச்சுக் கழிவுகள் உடலில் தங்காது. இந்த நச்சுக் கழிவுகளை வெளியேற்றும் தன்மை மிளகில் அதிகம் இருப்பதால்தான் நம் முன்னோர்கள் இந்த பழமொழியை சொன்னாங்க.

இதனாலேயே நம் முன்னோர்கள் வெளியிடங்களில் சாப்பிட்டு வரும்போது பத்து மிளகை வாயில் போட்டு சுவைத்து சாப்பிட்டுவிடுவார்கள். உணவில் இருக்கும் நச்சுத்தன்மை அனைத்தையும் மிளகு முறித்து விடும்.