தென்னிந்திய உணவான இட்லியானது அரிசி மற்றும் உளுத்தம் பருப்பை ஊற வைத்து அரைத்து நொதிக்கச் செய்து பின் வேக வைத்து சமைக்கப்படுவது.

இதில் கார்ப்போஹைட்ரேட் மற்றும் புரோட்டீன் அதிகம் உள்ளது. மேலும் இதில் நார்ச்சத்து அதிகமாகவும், க்ளுட்டன் கிடையாது. இட்லி மாவை நொதிக்க வைக்கும் முறையினால், அதில் புரதங்களின் இருப்புத்தன்மை அதிகமாகும் மற்றும் வைட்டமின் பி சத்தின் அளவு மேம்பட்டு இருக்கும்.

உடல் வலிமை அதிகமாகும்

உடல் வலிமையை அதிகரிக்கும் உளுத்தம் பருப்பு பயன்படுத்தி இட்லி செய்வதால், இதனை காலை வேளையில் உணவாக எடுத்து வந்தால், நாள் முழுவதும் உடல் வலிமையுடனும், சுறுசுறுப்புடனும் செயல்பட முடியும்.

கொழுப்புக்கள் குறைவு

வேக வைக்கும் முறையில் சமைக்கப்படும் இட்லியில் கொழுப்புக்கள் சுத்தமாக இருக்காது. இதனால் உடலில் தேவையற்ற கொழுப்புக்கள் சேர்வதைத் தடுக்கலாம்.

செல்கள் புதுப்பிக்கப்படும்

உடலினுள் பாதிக்கப்பட்ட நிலையில் உள்ள செல்களை பழுது பார்த்து புதுப்பிக்கும் லைசின் என்னும் அமினோ அமிலாம் இட்லியில் மூன்று மடங்கு அதிகமாக உள்ளது.

சிறுநீரக ஆரோக்கியம்

சிறுநீரகங்களின் செயல்பாட்டை மேம்படுத்தி, அதன் ஆரோக்கியத்தை அதிகரிக்கும் காமா அமினோபட்ரிக் என்ற அமினோ அமிலம் 10 மடங்கு அதிகமாக இட்லியில் உள்ளது.

எளிதில் செரிமானமாகும்

காலையில் மற்ற உணவுகளை விட இட்லியை உட்கொண்டால், செரிமான மண்டலத்தினால் எளிதில் செரிக்கப்படும். இதனால் செரிமான மண்டலம் சீராக இயங்கும்.

எடை குறையும்

முக்கியமாக உடல் எடையைக் குறைக்க நினைப்போருக்கு இட்லி மிகவும் சிறப்பான காலை உணவு. அதிலும் இதனை சிட்ரஸ் அமிலம் நிறைந்த தக்காளி சட்னியுடன் சேர்த்து உட்கொண்டால், சிட்ரஸ் அமிலமானது உடலில் உள்ள கொழுப்புக்களை கரைத்து, அரிசியினால், கார்போஹைட்ரேட்டுகள் உடலில் தங்குவதைத் தடுக்கலாம்.