Asianet News TamilAsianet News Tamil

இந்த ஒரு இலை போதும்..உங்கள்  முழங்கால் மற்றும் முதுகு வலிக்கு நிரந்தர தீர்வு கிடைக்கும்..!!

இத்தொகுப்பில் நாம் முதுகு வலி மற்றும் முழங்கால் வலியில் இருந்து நிரந்தர தீர்வு கிடைக்க என்ன செய்ய வேண்டும் என்பதை குறித்து இங்கு பார்க்கலாம்.

the amazing benefits of omam or ajwain leaves to cure back pain
Author
First Published Jul 21, 2023, 12:52 PM IST

முன்பெல்லாம் வயதானவர்கள் தான் முதுகு வலி இடுப்பு வலி கால் வலி என்று கூறிக்கொண்டே இருப்பார்கள். ஆனால் இன்றோ இளம் வயதினரும் அவ்வாறு கூறி வருகின்றனர். இதற்கு காரணம் என்ன? இந்த வழியில் இருந்து விடுபட என்ன செய்ய வேண்டும். அதற்கான வழிகள் என்ன என்பதை நாம் அறிந்து கொள்ள வேண்டும்.

இதற்கு முக்கிய காரணம் எதுவென்றால் நாம் அதிக நேரம் உட்கார்ந்து இருப்பது தான். ஆம், நாம் பணிபுரியும் அலுவலகங்களில் நாம் உட்கார்ந்து கொண்டே வேலை செய்கிறோம்.மேலும் சிறுநீரகத்தில் ஏற்படும் கோளாறு காரணமாகவும், எடை அதிகமாக இருப்பதாலும், அதிக நேரம் உடற்பயிற்சி மேற்கொள்வது என இப்படி சொல்லிக்கொண்டே போகும் அளவிற்கு பல காரணங்கள் உள்ளன. எனவே இந்த வழியில் இருந்து விடுபட என்ன செய்ய ஒரு மருந்து இருக்கிறது. அது குறித்து  இங்கு தெரிந்து கொள்ளலாம்.

இதையும் படிங்க: பப்பாளி இலை சாப்பிட்டால் டெங்கு குணமாகுமா? டெங்கு குறித்து 5 கட்டுக்கதைகள் நீங்கள் அறியாதவைஇதோ..!!

தேவையான பொருட்கள்:
கிராம்பு, வெந்தயம், கடுகு எண்ணெய், இஞ்சி, பூண்டு, ஓமம் அல்லது கற்பூரவள்ளி இலை.

செய்முறை:
முதலில் அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து கொள்ள வேண்டும். பாத்திரம் சூடானதும் அதில் 50 மில்லி லிட்டர் அளவிற்கு கடுகு எண்ணெயை ஊற்ற வேண்டும். எண்ணெய் நன்கு சூடானதும் தோல் நீக்கிய பூண்டு மற்றும் இஞ்சியை சிறிது சிறிதாக நறுக்கி அதில் சேர்க்க வேண்டும். பின் இவற்றுடன்  5 கிராம்பு மற்றும் 1 டேபிள் ஸ்பூன் அளவு வெந்தயத்தை சேர்த்துக் கொள்ளுகள். 

மேலும் முதுகு மற்றும் முழங்கால் வலியை முற்றிலும் குறைக்க ஓமம் சிறந்த மருந்தாகும். ஒருவேளை உங்களிடம் ஓமம் இல்லை என்றால், நீங்கள் 2 கற்பூரவள்ளி இலையை எடுத்து, அதனை சிறிது சிறிதாக நறுக்கி அந்த எண்ணெயில் சேர்த்துக் கொள்ளுங்கள். கற்பூரவள்ளி இலையும், முழங்கால் வலியை சரி செய்யும். இவை எல்லாவற்றையும் 4-5 நிமிடம் எண்ணெயில் நன்றாக வதக்கி கொள்ளுங்கள். இவை அனைத்தும் நிறம் மாறிய பின் பாத்திரத்தை அடுப்பில் இருந்து இறக்கி அதனை வடிகட்டி எடுத்துக் கொள்ளுங்கள். உங்களுக்கு வலி அதிகமாக இருந்தால்  இதனுடன் சிறிதளவு மஞ்சள் தூளை சேர்த்துக் கொள்ளலாம்.

இதையும் படிங்க: ஓம இலைகளின் சாற்றில் இவ்வளவு விஷயங்கள் இருக்குதா? வீட்டுல கண்டிப்பா இந்த செடியை வளர்க்க ஆரம்பிங்க!!

இவற்றை நீங்கள் இரவு தூங்கும் முன் பயன்படுத்த வேண்டும். உங்களுக்கு வலி இருக்கும் இடத்தில் இந்த எண்ணையை அங்கு தடவி நன்றாக மசாஜ் செய்ய வேண்டும். பின்னர் ஒரு காட்டன் துணி அல்லது பிளாஸ்டிக் கவர் மூலம் எண்ணெய் தேய்த்த இடத்தில் நன்கு சுற்றி விடவும். இது இரவு முழுவதும் அப்படியே இருக்கட்டும். நீங்கள் இந்த எண்ணையை 7-10 நாட்கள் தொடர்ந்து பயன்படுத்தி வந்தால் உங்களுக்கு நல்ல தீர்வு கிடைக்கும். முக்கியமாக இந்த எண்ணையை நீங்கள் உங்கள் உடம்பில் காயம் இருக்கும் இடத்தில் தேய்க்க கூடாது.

Follow Us:
Download App:
  • android
  • ios