Asianet News TamilAsianet News Tamil

பொடுகை போக்க பத்து எளிய இயற்கை வைத்திய முறைகள்…

Ten simple natural treatment methods to alleviate dandruff
ten simple-natural-treatment-methods-to-alleviate-dandr
Author
First Published Apr 8, 2017, 1:16 PM IST


பொடுகை போக்க இயற்கை வைத்திய முறையை பின்பற்றினால் நிரந்தர தீர்வு கிடைக்கும்.

பொடுகு ஷாம்பு அல்லது வாசனை தைலம் போன்ற நவீன மருந்துகளை பயன்படுத்தினால், முடிக்கு உத்திரவாதமில்லை. அதனால் பொடுகை போக்க இயற்கை வைத்திய முறையை பின்பற்றுவதே சரி.

1.. சின்ன வெங்காயம் கொஞ்சம் எடுத்து அரைத்து தலையில் தேய்த்த பின்னர், 15 நிமிஷம் கழித்து குளிக்கலாம்.

2.. தலை வறட்சி ஏற்பட்டால், வாரம் ஒருமுறை நல்லெண்ணை தேய்த்து ‘ஆயில் பாத்’ எடுப்பது நல்லது.

3.. பசலை கீரையை அரைத்து தலையில் அரப்பு போல் தேய்த்து குளித்தால் பொடுகை கட்டுப்படுத்தலாம்.

4.. பாலுடன் மிளகு பவுடரை சேர்த்து தலையில் தேய்த்து, 15 நிமிஷம் கழித்து குளித்தால் சில நாட்களில் பொடுகு தொல்லையில் இருந்து விடுபடலாம்.

5.. பொடுகு வர உடல் சூடு முக்கிய காரணமாக இருக்கிறது. அதனால், சூடு தணிக்கும் வெந்தய பவுடரை தலையில் தேய்த்து முழுகினால், பொடுகு தொல்லையும் தீரும் உஷ்ணமும் குறையும்.

6.. அருகம்புல் சாறு எடுத்து தேங்காய் எண்ணெயுடன் சேர்த்து நன்றாக காய்ச்சி ஆறவைத்து தினசரி தலையில் தேய்த்தால் பொடுகு மறையும்.

7.. வேப்பிலையுடன் கொஞ்சம் மிளகையும் சேர்த்து நன்றாக அரைத்து தலையில் தேய்த்து ஒரு மணி நேரம் ஊறவிட்டு பின் குளிக்கலாம்.

8.. தேங்காய் எண்ணையுடன் வேப்பெண்ணையும் சேர்த்து காய்ச்சி தேய்த்து வந்தால் பொடுகு நீங்கும்.

9.. தேங்காய் எண்ணெயுடன் சிறிது கற்பூரத்தை போட்டு வைத்து, அந்த எண்ணெயை தொடர்ந்து தேய்த்து வந்தால் பொடுகு மறைந்துவிடும்.

10.. ஆலிவ் எண்ணெயுடன் இஞ்சிச்சாறு சேர்த்து நன்றாக கலந்து தலைக்கு தேய்த்து சிறிது நேரம் ஊற வைத்து பிறகு குளித்தால் பொடுகு குறையும்.

Follow Us:
Download App:
  • android
  • ios