1.. சமையலுக்கு பயன்படுத்தும் பச்சை மிளகாயில் பெருமளவு நன்மைகள் இருக்கிறது. மேலும், பச்சை மிளகாயே உணவுக்கும் உடலுக்கும் நல்லது.

2.. பச்சை மிளகாயில் ஆன்டி ஆக்சிடன்ட்கள் மிக அதிக அளவில் இருப்பதால் நமது உடலில் இயங்கக் கூடிய உறுப்புகளுக்கு ஏற்படும் பாதிப்புகளிலிருந்து பாதுகாக்கின்றது.

3.. நோய் எதிர்ப்பு சக்தியை அளித்து புற்றுநோயிலிருந்தும் காப்பாற்றுகிறது.

4.. இளமையை நீடிக்க வைக்கும் வல்லமையும் இந்த பச்சை மிளகாய்க்கு உண்டு.

5.. இதில் விட்டமின் ‘சி’ அதிக அளவில் உள்ளதால் மிளகாயை பயன்படுத்தும் போது மூக்கடைப்பு குணமாவதை நாம் அனுபவ பூர்வமாக உணர்ந்திருப்போம்.

6.. சருமத்தை பாதுகாக்கும் விட்டமின் - ஈ -யும் அதிக அளவில் இருக்கிறது.

7.. எந்தவித கலோரிகளும் இல்லாமல் கிடைப்பதால் உடல் எடையை குறைப்பதற்காக டயட்டில் இருப்பவர்களும் தாராளமாக உணவில் சேர்த்துக் கொள்ளலாம்.

8.. ஆண்களுக்கு புரோஸ்டேட் புற்றுநோய் வரும் ஆபத்து அதிகமாக இருப்பதால் அவர்கள் பச்சை மிளகாயை உண்பதன் மூலம் அந்த பாதிப்பிலிருந்து தப்பிக்கலாம்.

9.. இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை சமநிலையில் வைக்க பச்சை மிளகாய் உதவுகிறது.

10.. இதில் நார்ச்சத்து அதிக அளவில் இருப்பதால் உணவு செரிமானம் வேகமாக நடைபெறுகிறது.