Asianet News TamilAsianet News Tamil

இந்தியாவில் முதன்முறையான தோள்பட்டை,முழங்கை மணிக்கட்டு பிரச்சனைகளுக்கான சிறப்பு சிகிச்சை மையம்! எங்கு தெரியுமா?

மனிதனின் விளையாட்டு மற்றும் அன்றாட நடைமுறைகளை செயல்படுத்த கைகள் மிக முக்கிய பங்காற்றுகிறது. குறிப்பாக தோள்பட்டையில் அமைந்துள்ள பந்து போன்ற மூட்டு, கைகளை 360 டிகிரிக்கு சுழற்றவும், வேலைகளை செய்யவும் உதவுகிறது. 

Special treatment center for shoulder, elbow wrist problems tvk
Author
First Published Feb 25, 2024, 11:47 AM IST

தோள்பட்டை, முழங்கை மணிக்கட்டு மற்றும் கையை பாதிக்கும் பிரச்சனைகள் உள்ள நோயாளிகளுக்கு பிரத்தியேகமாக வழங்கப்படும்  சிறப்பு மையம் இந்தியாவில் முதன்முறையாக சென்னை ஆழ்வார்பேட்டையில் தொடங்கப்பட்டுள்ளது. இதை சென்னை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் தொடங்கி வைத்தார்.

மனிதனின் விளையாட்டு மற்றும் அன்றாட நடைமுறைகளை செயல்படுத்த கைகள் மிக முக்கிய பங்காற்றுகிறது. குறிப்பாக தோள்பட்டையில் அமைந்துள்ள பந்து போன்ற மூட்டு, கைகளை 360 டிகிரிக்கு சுழற்றவும், வேலைகளை செய்யவும் உதவுகிறது. அதேபோல் மணிக்கட்டு மற்றும் முழங்கையில் உள்ள எலும்புகளும் மிக முக்கியமானது. ஆனால் இந்தியாவில் இடுப்பு மற்றும் முழங்கால் மாற்று அறுவை  சிகிச்சை குறித்து மக்களிடையே நன்கு விழிப்புணர்வு உள்ளது. 

தோள்பட்டை மற்றும் முழங்கை சம்பந்தமான சிகிச்சை மற்றும் மாற்று அறுவை சிகிச்சை குறித்து பெரிய அளவில் விழிப்புணர்வு இல்லை. மருத்துவர்கள் மற்றும் பொது எலும்பியல் அறுவை சிகிச்சை நிபுணர்கள் கூட தோள்பட்டை மாற்று அறுவை சிகிச்சையின் நன்மைகளைப் பற்றி அறிந்திருக்கவில்லை. தற்போது சென்னையில் பிரபல மருத்துவரான ராம் சிதம்பரம் தலைமையில் அமைக்கப்பட்டுள்ள  சென்னை UPPER LIMB UNIT- மருத்துவ மையத்தில், தோள்பட்டையின் எலும்பு, குருத்தெலும்பு அல்லது தசைகள் மோசமாக தேய்ந்து போனாலோ அல்லது கிழிந்தாலோ, உலகத்தரத்தில் அதிநவீன மருத்துவ முறைகளை பயன்படுத்தி, பாதிக்க மூட்டுகளையே மாற்ற முடியும். 

இதுகுறித்து மருத்துவர் ராம் சிதம்பரம் கூறுகையில்:  “CHENNAI UPPER LIMB UNIT-ல் தோள்பட்டை, முழங்கை, மணிக்கட்டு, கை ஆகியவற்றின் மூட்டுகளுக்கு பிரத்யேக சிகிச்சை அளிக்கப்படும். தோள்பட்டை, முழங்கை, மணிக்கட்டு, கை எலும்புகள் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு உலகத் தரத்திலான சிகிச்சையை வழங்குவதே எங்களுடைய நோக்கம். தோள் பட்டை மூட்டுகளில் தேய்மானமோ, டிஸ்லோகேஷனோ ஏற்பட்டால் சிகிச்சை அளிக்கப்படுவது வழக்கமானது. ஆனால் எங்களுடைய மையத்தில் மோசமாக பாதிக்கப்படும் நோயாளிகளுக்கு தோள் பட்டை மாற்று அறுவை சிகிச்சை அதிநவீன தொழில்நுட்பத்தின் உதவியுடன் செய்யப்படும் எனத் தெரிவித்தார்.  

Follow Us:
Download App:
  • android
  • ios