Some common information you need to know about potatoes ...
உருளைக்கிழங்கின் பிறப்பு
18-ம் நூற்றாண்டில் பிரஞ்சு மனிதர் அன்டயின் அகஷ்ட் இதன் பூவை முதன் முதலில் சட்டை பட்டனில் சொருகி கொண்டார். அதன் பின்னர் பதினாறாம் லூயி காய்கறிபோல சமைக்கலாம் என தனது ராஜசபையில் உத்தரவிட்டான். அதன் பின்னர் உலகம் முழுதும் பரவலானது.
உருளைக்கிழங்கின் புனைப்பெயர்:
ஸ்பட், மர்பி, பூமி ஆப்பிள்
உருளைக்கிழங்கின் பணி:
பல நாடுகளில் நிரந்தர உணவு, மற்ற காய்களுடன் கூட்டணி அமைத்துக் கொண்டு, சூப், சாலட், கூட்டு, குருமா குழம்பாக பரிணமிக்கும்.
வறுத்து, அவித்து, பொரித்து சமையல் செய்ய ஒத்துழைக்கும்.
பசை, ஆல்ஹால், டெக்ட்ஸ்ரோஸ், குளுக் கோஸ் தயாரிக்க பயன்படுதல்.
உருளைக்கிழங்கின் பயன்கள்
உருளை சத்து மிகுந்தது. இதில் வைட்டமின் சி, பொட்டாசியம் உள்ளது.
உருளையை தோலுடன் உண்பதனால் நார்சத்து உடம்பில் சேருகிறது.
மற்ற காய்கறியுடன் ஒப்பிடும் போதுகுறைவான கலோரிகளை உடைய சத்து மிகுந்தது.
இதனை வறுத்து உண்பதைவிட வேக வைத்து உண்பதே நல்லது.
உருளையில் பொட்டாசியம் அதிகம் இருப்பதால் இருதய நோயாளிகளுக்கும், ரத்த கொதிப்பு காரர்களுக்கும் இது மிகவும் நல்லது.
உருளையை சர்க்கரை நோயாளிகள் தவிர்ப்பது நல்லது.
