குளிருக்கு இதமாக சாக்ஸ் அணிந்து தூங்குவது நல்லதா?

இரவில் தூங்கும்போது கால்கள் குளிர்ந்து போவதை தவிர்க்க சிலர் சாக்ஸ் அணிந்து கொள்கின்றனர். இது உடல் நலத்திற்கு நல்லதா? என்பது குறித்து இங்கு காணலாம். 

sleeping with socks benefits and risks

நாடு முழுவதையும் குளிர் நடுங்க வைக்கிறது. டிசம்பர், ஜனவரியில் வெப்பநிலை மெல்ல குறையும். இரவில் குளிரினால் நல்ல தூக்கம் பாதிக்கக்கூடாது என்பதற்காக சிலர் கால்களில் சாக்ஸ் அணிந்து கொண்டு தூங்குவர். கம்பளி ஆடைகள், போர்வைகள் ஆகியவை உடலை சூடாக வைத்திருக்கும். ஆனால் கம்பளி போர்வை விலகும் போது கால்களில் குளிர் பரவ ஆரம்பிக்கிறது. இதைத் தடுக்க சிலர் சாக்ஸை அணிந்து கொள்கிறார்கள். இது சரியானதா? என்பதை இங்கு காணலாம். 

குளிர்காலம் முடியும்வரை இரவில் கால்களை வெப்பமாக வைக்க இரவில் சாக்ஸ் அணியலாம். பெண்கள் சாக்ஸ் அணியும்போது வெப்பநிலை சீராவதோடு, குதிகால்கள் வெடிப்பும் குறையும். 

சாக்ஸ் அணிவதால் பயன்கள்! 

  1. குளிர்காலத்தில் தினமும் சாக்ஸ் அணிந்தால் பாதங்கள் வறண்டு போகாமல் இருக்கும். 
  2. குளிர்ச்சியான பாதங்கள் ரத்த ஓட்டத்தை பாதிக்கும். இதனால் உறக்கம் வராமல் அவதிப்படுவீர்கள். தூங்கும்போது சாக்ஸ் அணிவதால் பாதங்களில் ரத்த ஓட்டம் சீராகும். நல்ல தூக்கம் கிடைக்கும். 
  3. சாக்ஸ் அணியும்போது குதிகால் வெடிப்பு சரியாகும். 
  4. குளிர்ச்சியான சுற்றுப்புறத்தில் தூங்கும் போது சாக்ஸை அணிந்து கொள்வது உங்களை வெப்பமாக வைத்திருக்கும். இதனால் நல்ல தூக்கம் கிடைக்கும்.

sleeping with socks benefits and risks

யார் அணியக் கூடாது? 

  • தங்களுடைய கால்களில் காயங்களோ, சிராய்ப்புகளோ இருப்பவர்கள் சாக்ஸ் அணிவதை தவிர்க்க வேண்டும். 
  • இரத்தநாளங்களில் பிரச்சனைகள் இருப்பவர்கள் சாக்ஸ் அணிவதை தவிர்க்கலாம். மிகவும் இறுக்கமான சாக்ஸ் அணிவது இரத்த ஓட்டத்தை பாதிக்கும். 

இதையும் படிங்க: Bananas: தினமும் காலையில் வாழைப்பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் தெரியுமா?

  • வெப்பமான காலநிலையில் வசிப்பவர்கள் சாக்ஸ் போட வேண்டாம். 
  • காலில் பூஞ்சை தொற்று, தோல் வியாதிகள் இருப்பவர்கள் சாக்ஸ் அணிவதை தவிர்க்க வேண்டும். அவர்களுடைய தோலுக்கு காற்று, ஒளி தேவை. 

sleeping with socks benefits and risks

கவனம்! 

சாக்ஸின் சுகாதாரம் முக்கியமான காரணியாகும். சாக்ஸை முறையாக துவைக்காமல் அழுக்காக பயன்படுத்துவது தோலில் தொற்று ஏற்படும் அபாயத்தை அதிகரிக்கும். நைலான் போன்ற செயற்கை பொருட்களால் செய்யப்பட்ட சாக்ஸ் பயன்படுத்தும்போது கூடுதலாக கவனம் தேவை. நம்முடைய பாதங்களில் தொற்று உண்டாகுவதை தடுக்க மென்மையான சாக்ஸ் பயன்படுத்தலாம். நைலானுக்கு பதில் பருத்தி சாக்ஸ் தேர்வு செய்யலாம்.  

 

சாக்ஸ் இல்லாமல்... 

  • சாக்ஸ் பயன்படுத்தாமல் கதகதப்பான தூக்கம் வேண்டும் என நினைப்பவர்கள் பின்வரும் எளிய வழிமுறைகளை பின்பற்றலாம். 
  • தூங்கும் முன்பு பாதங்களை மிதமான சூடுள்ள நீரில் நனைத்து மசாஜ் செய்யலாம். 
  • புகைபிடிப்பதை கைவிடுங்கள். அதில் உள்ள நிகோடின் இரத்த தமனிகளை இறுக்கமாக்குவதால் குறைந்த இரத்தம் மூட்டுகளுக்கு செல்லக் கூடும். 
  • வழக்கத்தைவிட குளிர்காலத்தில் புரதம், கொழுப்பை அதிகம் எடுத்து கொள்ளுங்கள். 
  • தூங்குவதற்கு 1 அல்லது 2 மணி நேரத்திற்கு முன்பு வெதுவெதுப்பான நீரில் குளிக்கலாம். இதனால் நல்ல தூக்கம் வரும். 

சாக்ஸ் அணிவதால் பாதங்களில் உள்ள இரத்த நாளங்கள் சுருங்கி இரத்த ஓட்டம் குறையும். இதனால் இதமான தூக்கம் கிடைக்கும். அதே சமயத்தில் சாக்ஸ் அணியாமல் இருப்பதும் தவறில்லை என்கின்றனர் நிபுணர்கள். 

இதையும் படிங்க: திருப்தியான உடலுறவை இப்படியும் கண்டுபிடிக்கலாம்.. இதை பத்தி தெரியுமா?

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios