Simple Natural Foods for how to cleanse the blood

உடலில் உள்ள உறுப்புகளை சுறுசுறுப்பாக இயங்க வைக்க ரத்தம் தான் முக்கியம்.

இயற்கையான முறையில் நமது உடம்பில் உள்ள ரத்தத்தை சுத்திகரிப்பது எப்படி?

1.. செம்பருத்திப் பூவின் இதழ்களை நன்றாகச் சுத்தம் செய்து, காய வைத்து பொடி செய்து அதை தினமும் காலை மற்றும் மாலை வேளைகளில் 1 கிளாஸ் வெந்நீரில் 1 ஸ்பூன் செம்பருத்தி பூவின் பொடியை கலந்து குடித்து வந்தால், ரத்தம் தூய்மை அடையும்.

2.. தினமும் உணவில் பீட்ரூட்டை சமைத்து சாப்பிட்டு வந்தால், நமது உடம்பில் புத்தம் புதிய ரத்தம் உற்பத்தியாகும்.

3.. முருங்கை இலைகளில் இரும்பு, தாமிரம், சுண்ணாம்புச்சத்து அதிகமாக இருக்கின்றது. எனவே இந்த இலைகளை நெய்யில் வதக்கி சாப்பிட்டால் ரத்த சோகை இருப்பவர்களின் உடம்பில் நல்ல ரத்தம் உற்பத்தியாகும்.

4.. முருங்கை இலை சாறுடன் பால் கலந்து கர்ப்பிணிகள் மற்றும் குழந்தைகளுக்குக் கொடுத்தால், ரத்தம் சுத்தம் அடையும். எலும்புகளும் வலிமையடையும்.

5.. இஞ்சிச் சாற்றுடன் தேன் கலந்து சாப்பிட்டு வந்தால் கூட ரத்தம் சுத்தமாகும்.