குளிப்பது ஒரு குத்தமா? தினமும் குளிச்சா நோய் எதிர்ப்பு சக்தி குறையும்  - அறிவியல் கூறுவது இதோ..!!

தினமும் குளிப்பது தீங்கு விளைவிக்கிறது மற்றும் நோய் எதிர்ப்பு சக்தி குறைகிறது என்று ஆய்வுகள் கூறுகின்றது.

side effects of bath everyday scientific reasons here

நம்மை நாம் தூய்மையாக வைத்துக் கொள்வதற்காக தினமும் குளிக்கிறோம். குறிப்பாக இந்தியர்கள் தினமும் குளிப்பதை வழக்கமாக வைத்துள்ளனர். கடும் குளிரிலும் கூட மக்கள் குளிப்பதை தவறு விடுவதில்லை. நம்முடைய இந்திய கலாச்சாரத்தில் குளிப்பது ஒரு புனிதமாக கருதுகின்றனர். இந்த நிலையில், தினமும் குளிப்பது உடலுக்கு தீங்கு விளைவிக்கும் என்று யாராவது சொன்னால் நீங்கள் நம்புவீர்களா? ஆம் ஆனால் அதுதான் உண்மை என்று விஞ்ஞானம் சொல்கிறது.

தினமும் குளிப்பது தீங்கு விளைவிக்கிறது மற்றும் நோய் எதிர்ப்பு சக்தி குறைகிறது என்று அறிவியல் கூறுகிறது. மேலும் குளிர்காலத்தில் தினமும் குளிப்பதை குறைத்துக் கொள்ளவது நல்லது என்று உலகெங்கிலும் இருக்கும் தோல் நிபுணர்கள் கூறுகின்றனர். ஏனெனில், அதிகமாக குளிப்பது நமது சருமத்திற்கு தீங்கு விளைவிக்கும் என்று கூறுகின்றனர். அதுபோல, சருமம் தன்னைத் தானே சுத்தம் செய்து கொள்ளும் திறன் கொண்டது என்பது பல ஆய்வுகள் கூறுகின்றது. 

இதையும் படிங்க:  சக்கரை நோயாளிகள் வெந்நீரில் குளிக்கக்கூடாது- ஏன்னு தெரிஞ்சுக்கோங்க..!!

வெந்நீரில் குளிப்பது தீமை:
பொதுவாக நாம் குளிர்காலத்தில் வெந்நீரில் குளிப்பதை வழக்கமாகக் கொண்டுள்ளோம். மேலும் குளிர்காலத்தில் வெந்நீரில் நீண்ட நேரம் குளித்தால் நன்மையை விட தீமையே அதிகரிக்கும். சொல்லப்போனால் இதனால் சருமம் வறண்டு போக வாய்ப்பு அதிகம் இருக்கிறது. ஏனெனில், இது உடலில் இருக்கும் இயற்கையான எண்ணெய்யை நீக்குகிறது. நம் உடலில் இருக்கும் இந்த இயற்கை எண்ணெய் மிகவும் முக்கியமானது. மேலும் இது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க செய்யும் பொருளாகவும் செயல்படுகிறது. ஆகையால், இந்த எண்ணெய் உங்களை ஈரப்பதமாகவும், பாதுகாக்கவும் வைத்திருக்க உதவுகிறது என்று அறிவியல் கூறுகிறது. ஆய்வு ஒன்றில்,“அதிகமாக குளிப்பது  உடலின் பாதுகாப்பு அமைப்பை பாதிக்கிறது. இதனால் கிருமிகள் மற்றும் வைரஸ்களுக்கு எதிராக போராட முடியவில்லை. விரைவில் உடல் பலவீனமடைகிறது".

நகங்கள் சேதமடைகிறது:
அதுபோல் தினமும் வெந்நீரில் குளித்தால் நகங்கள் சேதமடையும். ஏனெனில் குளிக்கும்போது நகங்கள் தண்ணீரை உறிஞ்சுகிறது. இதனால் அவற்றின் இயற்கையான தோற்றம் நீங்கி, அவை மென்மையாகி விரைவில் உடைந்துவிடுகிறது. இதனால் நகத்தில் ஆணி ஏற்படுகிறது. தொற்று நோய் நிபுணர் ஒருவர் கூறுகையில், “நாம் தினமும் குளிப்பதால் நம் விரைவில் சருமம் வறண்டு பலவீனமடைகிறது. இவற்றால் தொற்றுநோய்க்கான ஆபத்து மிக வேகமாக அதிகரிக்கும். எனவே தான் தினமும் குளிப்பதை தவிர்க்க வேண்டும்". 

குளிப்பதின் அம்சங்கள்:
குளிக்கும் பழக்கம் என்பது ஒரு நபரின் மனநிலை, வெப்பநிலை, தட்பவெப்பநிலை, பாலினம் மற்றும் சமூக அழுத்தம் ஆகியவற்றைப் பொறுத்ததாகும். இந்தியாவில் தண்ணீர் கிடைப்பது ஒரு பெரும்பாடாக இருக்கிறது. ஆனாலும் சமூக அழுத்தத்தினால் அவர்கள் தினமும் குளிக்கின்றனர்.

இதையும் படிங்க:  பிரபலங்கள் முதல் பணக்காரர்கள் வரை ஐஸ் குளியல் எடுப்பது ஏன் தெரியுமா? தெரிஞ்சா நீங்களும் ட்ரை பண்ணுவீங்க..!!

குளிப்பதில் இந்தியா முன்னிலை:
சமீபத்தில் நடத்தப்பட்ட ஆய்வு ஒன்றில்,  மக்கள் அதிகமாக குளிக்கும் நாடுகளில் இந்தியா, ஜப்பான் மற்றும் இந்தோனேஷியா முன்னணியில் உள்ளது. மேலும் நாம் தினமும் குளிப்பது தண்ணீரை வீணாக்குவது மட்டுமல்ல, உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் தீங்கு விளைவிக்கப்படுகிறது என்று ஆய்வுகள் கூறுகின்றது.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios