Milk: பாலுடன் சேர்த்து இந்த உணவுகளை சாப்பிடக் கூடாது? ஏன் தெரியுமா?

பாலுடன் சேர்த்து ஒருசில உணவுப்பொருட்கள் உண்பதை நாம் தவிர்க்க வேண்டும். இல்லையெனில், எதிர்மறை பாதிப்புகள் ஏற்பட வாய்ப்புள்ளது.

Should not you eat these foods with milk? Do you know why?

உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும் உணவுப் பொருட்களில் அதிகளவில் புரதச்சத்து நிறைந்ததும் மற்றும் மிக எளிதாக கிடைக்க கூடியதுமாக இருப்பது பால். பாலில் புரதம், கால்சியம், கொழுப்புகள், கார்போஹைட்ரேட்டுகள், மற்றும் வைட்டமின்கள் உள்பட பல ஊட்டச்சத்துகள் கொட்டிக் கிடக்கிறது. பாலில் இருக்கும் வைட்டமின் டி மற்றும் கால்சியம் சத்துக்கள் எலும்பு வளர்ச்சி மற்றும் ஆரோக்கியத்திற்கும் மிக முக்கியமானது. இதிலுள்ள வைட்டமின் 'ஏ' கண்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது. பாலில் உள்ள முக்கிய புரதச்சத்துகள் இரத்த அழுத்தம் மற்றும் கொலஸ்ட்ரால் அளவை குறைக்க உதவுகிறது என ஆய்வுகள் தெரிவிக்கின்றன. அதேநேரத்தில், பாலுடன் சேர்த்து ஒருசில உணவுப்பொருட்கள் உண்பதை நாம் தவிர்க்க வேண்டும். இல்லையெனில், எதிர்மறை பாதிப்புகள் ஏற்பட வாய்ப்புள்ளது. பாலுடன் சேர்த்து உட்கொள்ள கூடாத உணவுகள் பற்றி இங்கு காண்போம்.

முள்ளங்கியுடன் பால் வேண்டாம்

உடல்நலத்திற்கு ஆரோக்கியம் தரும் காய்கறிகளில் முள்ளங்கிக்கு எப்போதுமே தனி முக்கியத்துவம் உள்ளது. ஆனால், பொருந்தாத உணவுக் கலவை பட்டியலில் முள்ளங்கி இருப்பதால், முள்ளங்கியை சாப்பிட்ட பிறகு, பால் குடிப்பதை தவிர்க்க வேண்டும் என ஆயுர்வேத மருத்துவத்தில் அறிவுறுத்தப்பட்டுள்ளது. செரிமானப் பிரச்னைகளைத் தவிர்ப்பதற்காக பால் மற்றும் முள்ளங்கியை தனித்தனியாக சாப்பிட வேண்டும். முள்ளங்கியில் செய்த உணவை சாப்பிட்டு, குறைந்தது இரண்டு மணிநேரம் இடைவெளி விட்ட பிறகு, பால் குடிக்க வேண்டும். மேலும், பிஸ்கட், கேட், குக்கீஸ் மற்றும் காளான் போன்றவற்றுடன் சேர்த்து பால் உட்கொள்வதை தவிர்க்க வேண்டும்.

கேரளா ஸ்பெஷல் தித்திப்பான உண்ணியப்பம்! - ஈசியா செய்யலாம் வாங்க!

வாழைப்பழத்துடன் பால் வேண்டாம்

"ஒரு டம்ளர் பால் மற்றும் ஒரு வாழைப்பழம் சாப்பிட்டால் போதும் வயிறு நிறைஞ்சிடும்" என பலரும் கூறுவதுண்டு. ஆனால், இது முற்றிலும் தவறான கருத்தாகும். பால் மற்றும் வாழைப்பழம் ஆகிய இரண்டுமே சத்தான உணவுகளாகும். இவற்றை நாம் ஒரே நேரத்தில் உட்கொண்டால், நீண்ட நேரத்திற்கு வயிறு நிறைந்த உணர்வு இருக்கும். செரிமானம் ஆகவும் அதிக நேரம் எடுக்கும். சோர்வடையவும் வாய்ப்புள்ளது. ஆகவே, ஆரோக்கியம் நிறைந்த மற்றும் சீரான உணவின் ஒரு பகுதியாக, சிறிது நேரம் இடைவெளி விட்டு பால் மற்றும் வாழைப்பழத்தை சாப்பிடலாம். அதே போல் வாந்தி மற்றும் செரிமானப் பிரச்னைகளைத் தவிர்க்க, முலாம் பழத்துடன் பால் சேர்த்து சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். 

Egg: முட்டை சாப்பிட்டால் உடல் எடை குறையுமா? உண்மைத் தகவல் இதோ!

மீனுடன் பால் வேண்டாம்

பால் குளிர்ச்சி விளைவை கொண்டிருக்கும். ஆனால், மீன் வெப்பமூட்டும் விளைவைக் கொண்டுள்ளது. ஆகையால், இவ்விரண்டையும் சேர்த்து சாப்பிட்டால், உடலில் ரசாயன மாற்றங்கள் ஏற்பட்டு, சமநிலையின்மை  உருவாக வாய்ப்புள்ளது. இதனால், மீன் மட்டுமல்லாமல், பிற இறைச்சிகளுடனும் பாலை சேர்த்து சாப்பிடுவதை தவிர்க்க வேண்டியது அவசியம். இல்லையெனில் செரிமானமின்மை போன்ற பல பிரச்னைகள் உண்டாக வாய்ப்புள்ளது என மருத்துவர்கள் அறிவுரைக்கின்றனர்.

புளிப்புப் பொருட்களுடன் பால் வேண்டாம் 

புளிப்புப் பொருட்களுடன் பாலை சேர்த்து உட்கொள்வதை முடிந்தளவிற்கு தவிர்ப்பது நல்லது. வைட்டமின் சி நிறைந்துள்ள பழங்களையும் பாலுடன் சேர்த்து உட்கொள்ளக் கூடாது. ஏனெனில், பால் செரிமானம் ஆக அதிக நேரம் எடுக்க நேரிடும். புளிப்பான பழங்களை சேர்த்து உட்கொள்ளும் போது பால் உறைந்து விடும் என்பதால், வாய் மற்றும் நெஞ்செரிச்சல் ஏற்பட வாய்ப்புள்ளது. இதனால் சளி, இருமல் மற்றும் ஒவ்வாமை உள்பட பல பாதிப்புகளுக்கு வழிவகுக்கும்.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios