Asianet News TamilAsianet News Tamil

வழுக்கை தலையில் முடிவளர வேண்டுமா? அப்போ இந்த டிப்ஸ் உங்களுக்குதான்…

should mutivalara-bald-head-then-unkalukkutan-these-tip
Author
First Published Jan 12, 2017, 2:34 PM IST

அளவுக்கு அதிகமாக முடி உதிர்தல்தான் சொட்டை, வழுக்கை தலைக்கு அடித்தளம். ஆரம்பத்திலேயே போதிய பராமரிப்பு கொடுத்தால் இதனை தடுக்க சொட்டையை முழுவதும் தடுக்க முடியும்.

அப்படியே முடி ஆங்காங்கே கொத்து வந்தால் உங்களுக்கு சொட்டை விழுவதற்கான அறிகுறி. ஆகவே உடனடியாக அதனை கவனிக்க வேண்டும்.

சொட்டையிலும் முடி வளரும் சித்த வைத்தியங்கள்:

முடி உதிர்தலை தடுக்க:

1.. வேப்பிலை ஒரு கைப்பிடி எடுத்து நீரில் வேகவைத்து ஒரு நாள் கழித்து வேக வைத்த நீரைக் கொண்டு தலை கழுவி வந்தால் கொத்தாக முடி கொட்டுவது நின்று விடும்.

2.. தேங்காய் எண்ணெயை கொதிக்க வைத்து அதில் வெந்தயப் பொடி, குன்றிமணி பொடி சேர்த்து குறைவான தீயில் சில நிமிடங்கள் வைத்து பின் அடுப்பை அணைக்கவும். ஆறியபின் அந்த எண்ணெயை வாரம் ஒருமுறை தலையில் தேய்த்து குளித்தால் மெலிந்த கூந்தல் உடையவர்களுக்கு நன்றாக முடி கால்கள் தூண்டப்பட்டு முடி வளரும்.

வழுக்கையில் முடி வளர:

1.. வழுக்கையில் முடி வளர கீழாநெல்லி வேரை சுத்தம் செய்து சிறிய துண்டாக நறுக்கி தேங்காய் எண்ணெயில் போட்டு காய்ச்சி தலைக்கு தடவி வந்தால் வழுக்கை மறையும்.

2.. கடுக்காய், தான்றிக்காய், நெல்லிக்காய் பொடிகளை கலந்து இரவில் தண்ணீரில் காய்ச்சி ஊறவைத்து காலையில் எலுமிச்சை பழச்சாறு கலந்து கலக்கி தலையில் தேய்த்து குளித்து வர சொட்டையில் முடி வளரும்.

கருமையான முடி வளர:

1.. முடி கருப்பாக ஆலமரத்தின் இளம்பிஞ்சு வேர், செம்பருத்தி பூ இடித்து தூள் செய்து தேங்காய் எண்ணெயில் காய்ச்சி ஊறவைத்து தலைக்கு தேய்த்து வர முடி கருப்பாகும்.

2.. காய்ந்த நெல்லிக்காயை பவுடராக்கி தேங்காய் எண்ணெயுடன் கலந்து கொதிக்க வைத்து வடிகட்டி தேய்த்துவர முடி கருமையாகும்.

பொலிவான கூந்தல் பெற:

1.. தலை முடி கருமை மினுமினுப்பு பெற அதிமதுரம் 20 கிராம், 5 மில்லி தண்ணீரில் காய்ச்சி ஆறிய பின் பாலில் ஊறவத்து 15 நிமிடம் கழித்து கூந்தலில் தடவி ஒரு மணி நேரம் ஊற வைத்து குளிக்க வேண்டும்.

2.. கேரட் சாறு மற்றும் எலுமிச்சை சாறை தேங்காய் எண்ணெயில் கலந்து காய்ச்சி அந்த எண்ணெயை வாரம் மூன்று நாட்கள் தலையில் தேய்த்து குளித்தால் மின்னும் கூந்தல் கிடைக்கும்.

Follow Us:
Download App:
  • android
  • ios