Asianet News TamilAsianet News Tamil

கண்பார்வை நன்றாய் தெரிய, நோய் எதிர்ப்புச் சக்தி கூட பீர்க்கன்காய் அதிகம் சாப்பிடவும்…

See the eyesight well even the immune system can eat too much beer ...
See the eyesight well even the immune system can eat too much beer ...
Author
First Published Sep 5, 2017, 1:30 PM IST


பீர்க்கன்காய்

பீர்க்கன்காயில் நார்ச்சத்து, ‘ஏ’, ‘பி’, ‘சி’ வைட்டமின்கள், தாது உப்புகள் போன்ற அனைத்து விதமான சத்துக்களும் நிறைந்துள்ளது. மேலும் இதன் மருத்துவ பலன்களை பார்க்கலாம்.

நார்ச்சத்து, ‘ஏ’, ‘பி’, ‘சி’ வைட்டமின்கள், தாது உப்புகள் போன்றவை அளவுடன் அமைந்திருப்பதால் நீரிழிவு நோயாளிகள் பயமின்றிப் பீர்க்கங்காயைச் சேர்த்துக் கொள்ளலாம்.

இது சத்துணவாகவும் டானிக் மருந்து போலவும் செயல்பட்டு உடல் நலத்தைக் பாதுகாக்கும். முற்றிய பீர்க்கங்காயை சமைத்துண்பதால் மேற்கண்ட நன்மைகள் நமக்குக் கிடைக்கும்.

நீரிழிவு நோயாளிகளுக்கும், குண்டான மனிதர்களுக்கும் கெடுதல் செய்யாத காய்கறியாகவும் திகழ்கிறது.

சொறி, சிரங்கு, நாள்பட்ட புண்கள் முதலியன குணமாகப் பீர்க்கன் கொடி இலைகளை அரைத்து, குறிப்பிட்ட இடங்களில் வைத்துக் கட்டினால் போதும்; இரண்டு மூன்று கட்டுகளிலேயே குணமாகிவிடும்.

பீர்க்கன் இலையைச் சாறு பிழிந்து எடுத்துக் கொள்ள வேண்டும். சிறிது நேரம் சூடுபடுத்தி, அந்த இலைச்சாற்றை ஒரு தேக்கரண்டி வீதம் சாப்பிட்டால் நீரிழிவு நோய் கட்டுப்படும்.

சிறு குழந்தைகளின் கண்நோய் நீங்க இதே இலைச்சாற்றில் ஓரிரு சொட்டுக்கள் கண்ணில் விட்டால் போதும். ஆனால், அந்த இலைச்சாற்றை சூடுபடுத்தக்கூடாது.

பீர்க்கன்காயின் விதைகளில் இருந்து எடுக்கப்படும் எண்ணெய் தோல் நோய், தொழுநோய் முதலியவற்றுக்குச் சக்தி வாய்ந்த மேல் பூச்சு எண்ணெய் ஆக திகழ்கிறது.

இரத்த சோகை நோயாளிகள் இதன் வேரைக் காய்ச்ச வேண்டும். ஆறியதும் நீரை வடித்து, அருந்த வேண்டும். இலைச்சாற்றைப் போலவே இதுவும் கசப்பாகத்தான் இருக்கும்; ஆனால், சக்தி மிக்கது. இரத்த சோகை விரைந்து குணமாகும். கால் வீக்கமும் இதே கஷாயத்தால் குறையும்.

கண்பார்வை நன்றாய் தெரியவும், நோய் எதிர்ப்புச் சக்தியுடன் வாழவும் அடிக்கடி பீர்க்கங்காயையும் சமையலில் சேர்த்துக்கொள்ளுங்கள். காய்கறிகளுள் பச்சையாகச் சாப்பிடக் கூடாத காய்கறி இதுதான்.

தோல் நோயாளிகள் தவறாமல் இதைச் சேர்த்துக் கொண்டால் இரத்தம் சுத்தமாகி நோய் விரைந்து குணமாவது உறுதி.

Follow Us:
Download App:
  • android
  • ios