காய்ச்சல் வராமல் தடுக்க என்னென்ன முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்று இந்த பதிவில் பார்க்கலாம்.

மழைக்காலம் வந்துவிட்டாலே பருவமழை தொடர்பான நோய்களும் வேகமாக பரவத்தொடங்கும். குறிப்பாக அக்டோபர், நவம்பர் மாதங்களில் மழைக்கால நோய் பரவல் அதிகமாக இருக்கும். அந்த வகையில் இந்த ஆண்டும் காய்ச்சல் பாதிப்பு அதிகமாக உள்ளது. மாறாக அதீத காய்ச்சல், சளி, தொண்டை வலி, வாந்தி போன்றவை இருந்தால் அவர்களை உடனடியாக மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளிக்கப்பட வேண்டும். இல்லையெனில் உயிருக்கே ஆபத்து ஏற்படவும் வாய்ப்பிருப்பதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

எனவே காய்ச்சல் வராமல் தடுக்க என்னென்ன முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்று இந்த பதிவில் பார்க்கலாம். காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றவர்களுக்கு பரவாமல் இருக்க தங்களை தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும் மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். எனவே இந்த மழைக்காலத்தில் காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டால் ஓரிரு நாட்கள் பார்த்து விட்டு காய்ச்சல் குறையாத நிலையில் உடனடியாக மருத்துவர்களை அணுகுவது நல்லது என்றும் அறிவுறுத்தப்படுகிறது.

ஏசியாநெட்தமிழ்செய்திகளைஉடனுக்குஉடன் Whatsapp Channel-லில்பெறுவதற்குகீழேகொடுக்கப்பட்டுஇருக்கும்லிங்குடன்இணைந்துஇருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

அடிக்கடி கைகளை கழுவுதல், கொதிக்க வைத்து ஆற வைத்த நீரை குடித்தல், சூடான உணவை சாப்பிடுதல், ஹோட்டல் உணவுகளை தவிர்த்து வீட்டிலேயே ஆரோக்கியமான உணவை சாப்பிடுவது, கழிவறைகளை சுத்தமாக வைத்துக்கொள்வது போன்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுப்பது அவசியம் என்றும் மருத்துவர்கள் அறிவுறுத்தி உள்ளனர்.

காய்ச்சல் பாதிப்பு - எப்படி தற்காத்து கொள்வது?

  • நோய்வாய்ப்பட்டவர்களுடன் நெருங்கிய தொடர்பைத் தவிர்க்கவும். நீங்கள் நோய்வாய்ப்பட்டிருக்கும் போது, மற்றவர்களிடமிருந்து சமூக இடைவெளியை பின்பற்றவும்.
  • உடல்நிலை சரியில்லாமல் இருக்கும்போது வேலை, பள்ளி மற்றும் அலுவலகங்களுக்கு செல்லாமல் வீட்டிலேயே இருங்கள். இது உங்கள் நோய் மற்றவர்களுக்கு பரவாமல் தடுக்க உதவும்.
  • காய்ச்சல் வைரஸ்கள் முக்கியமாக காய்ச்சல் உள்ளவர்கள் இருமல், தும்மல் அல்லது பேசும்போது ஏற்படும் நீர்த்துளிகளால் பரவுகிறது. இருமல் அல்லது தும்மும்போது உங்கள் வாய் மற்றும் மூக்கை ஒரு துணியால் மூடவும். உங்களைச் சுற்றியுள்ளவர்கள் நோய்வாய்ப்படாமல் தடுக்கலாம்.
  • அடிக்கடி சோப்பு அல்லது சானிடைசரை பயன்படுத்தி கைகளை கழுவுதல்.
  • வெளியில் சென்று வீடு திரும்பும் போது கை, கால்களை நன்றாக கழுவ வேண்டும்.
  • குளிர்ந்த நீர், ஐஸ் போட்ட பானம் ஆகியவற்றை தவிர்க்கவும். 
  • கொதிக்க வைத்து ஆற வைத்த நீரை பருகவும்.
  • சத்தான உணவை சாப்பிடுங்கள். குறிப்பாக வைட்டமின் சி, புரதச்சத்து மிக்க உணவுகளை தவறாமல் எடுத்துக்கொள்ள வேண்டும்.
  • உணவில் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் பொருட்களை சேர்க்க வேண்டும். மிளகு, இஞ்சி மற்றும் மஞ்சள் சேர்க்கவும்.
  • தொண்டையில் கரகரப்பு இருந்தால், சமையல் உப்பை வெந்நீரில் போட்டு வாய் கொப்பளிக்க வேண்டும்.

சீனாவில் நிமோனியா பரவல்.. தமிழ்நாடு, கர்நாடகா உள்ளிட்ட 6 மாநிலங்களில் கண்காணிப்பு தீவிரம்..