உப்பு மட்டுமல்ல... அதிக சர்க்கரையும் இரத்த அழுத்தத்தை அதிகரிக்கும்... எச்சரிக்கும் ஆராய்ச்சியாளர்கள்!!

உயர் ரத்த அழுத்த நோயாளிகள் தங்கள் உணவில் உப்பை மட்டும் அல்ல, சர்க்கரையும் குறைத்து கொள்ள வேண்டும் என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். 

Salt and sugar effects on blood pressure

உயர் இரத்த அழுத்தம், சர்க்கரை நோய் ஆகியவை உலகளவில் வேகமாக வளர்ந்து வரும் நோய்களில் குறிப்பிடத்தகுந்தவை. இது இளைஞர்களையும் கூட பாதிக்கிறது. இந்த இரண்டு நோய்களும் முழு உடலையும் பல வழிகளில் பாதிக்கிறது. இதை சீராக வைக்காவிட்டால் மரணம் கூட ஏற்படலாம் என சுகாதார நிபுணர்கள் கூறுகின்றனர். இதை கட்டுக்குள் வைக்க வாழ்க்கை முறை, உணவு பழக்கங்களை மாற்ற வேண்டும். 

அதிக சோடியம் உட்கொள்வது இரத்த அழுத்தத்தை அதிகரிப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. அதிக சர்க்கரை சேர்ப்பதும் நீரிழிவு நோய்க்கு தீங்கு விளைவிக்கும் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். ஆனால் நீங்கள் சர்க்கரையை அதிகமாக சாப்பிட்டால் அது இரத்த அழுத்தத்தை அதிகரிக்கும் அபாயத்தையும் அதிகரிக்கும் என்பது உங்களுக்குத் தெரியுமா? ஆம். உண்மை தான். 

சர்க்கரை சேர்ப்பதால் ரத்தத்தில் உள்ள சர்க்கரையை அதிகரிப்பதோடு மட்டுமில்லாமல், ரத்த அழுத்தமும் அதிகரிக்கும் அபாயம் உள்ளது என ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். 

உப்பு மற்றும் சர்க்கரை எது மோசம்? 

நேஷனல் லைப்ரரி ஆஃப் மெடிசினில் வெளியிடப்பட்ட அறிக்கையின்படி, உப்பு, சர்க்கரை ஆகிய இரண்டும் இரத்த அழுத்தத்தை (பிபி) அதிகரிப்பதில் தொடர்புடையது. இரத்த அழுத்தம் அதிகரிப்பதற்கு உப்பு ஒரு முக்கிய காரணம் என்று பல்வேறு ஆய்வுகள் தொடர்ந்து காட்டுகின்றன. இந்த ஆபத்தை மனதில் வைத்து பின்லாந்து, இங்கிலாந்து போன்ற நாடுகள் உப்பின் உட்கொள்ளலைக் குறைத்துள்ளன. ஆனால் உப்பை குறைத்துவிட்டு நீங்கள் நிறைய சர்க்கரை உட்கொண்டால், அதுவும் உடலுக்கு ஆபத்து தான்.  

Salt and sugar effects on blood pressure

சர்க்கரையை அதிகமாக உட்கொள்வது உடல் பருமனுக்கு வழிவகுக்கிறது. இது இரத்த அழுத்தம் அதிகரிப்பதற்கும் முக்கிய காரணம். சமீபத்திய ஆய்வுகள், அதிக அளவு சர்க்கரையை உட்கொள்வது, குறிப்பாக குளிர்பானங்கள் குடிப்பது இரத்த அழுத்தத்தில் நேரடி விளைவை ஏற்படுத்தக்கூடும் என கண்டுபிடித்துள்ளன. சர்க்கரை அதிகம் சேர்ப்பது நம் இதயத்திற்கு ஆபத்தானது. 

இதய ஆரோக்கியம்: 

சமீபத்திய ஆய்வில் 10 அமெரிக்கர்களில் ஒருவர் தினமும் கூடுதல் சர்க்கரையை உட்கொள்வதாக கண்டறியப்பட்டது. அவர்களுக்கு இதய நோய் அபாயம் அதிகரிப்பது மட்டுமல்லாமல், இதய நோயினால் ஏற்படும் மரணமும் மற்றவர்களை விட மூன்று மடங்கு அதிகமாக காணப்படுவதாக தெரியவந்துள்ளது. ஏனென்றால் அதிக சர்க்கரை இரத்த அழுத்தம் மற்றும் உடல் பருமனை அதிகரிப்பதால், இதய நோய் அபாயமும் அதிகரிக்கும். 

இதையும் படிங்க: வெறும் 10 ரூபாய் செலவில் சர்க்கரை நோய்க்கு தீர்வு... இந்த 'மூக்கிரட்டை கீரை' பத்தி தெரியுமா?

கல்லீரலில் கொழுப்பு பிரச்சனை: 

பெரும்பாலான பதப்படுத்தப்பட்ட உணவுகள் மற்றும் சிற்றுண்டிகளில் உள்ள இனிப்பு பிரக்டோஸ், ஒரு வகை சர்க்கரையிலிருந்து வருகிறது. இதனால் கல்லீரலில் கொழுப்பை அதிகரிப்பதாக ஆய்வுகள் கண்டறிந்துள்ளன. நீங்கள் தொடர்ந்து பிரக்டோஸை உட்கொண்டால், சிறிய கொழுப்புத் துளிகள் உங்கள் கல்லீரலில் படிவதாக ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர். இது ஆல்கஹால் அல்லாத கொழுப்பு கல்லீரல் நோய் அபாயத்தை அதிகரிக்கலாம். சில சந்தர்ப்பங்களில், தீவிர பக்க விளைவுகளின் ஆபத்தும் உள்ளது. 

தூக்கக் கோளாறு: 

பகலில் அதிக சர்க்கரை உட்கொள்வது இரத்தத்தில் சர்க்கரையின் அளவை அதிகரிக்கும். சர்க்கரை அதிகம் உட்கொள்வதால் இரத்த அழுத்த அளவு அதிகமாகும். தூக்கத்தை ஊக்குவிக்கும் ஹார்மோன்களை பாதிக்கும் என்று ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர். நீங்கள் குறைவாக தூங்கினால், திடீர் மரணம் ஏற்படும் அபாயம் இருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர். ஆகவே உணவில் உப்பு, சர்க்கரை ஆகியவற்றை அளவாக உண்பது நல்லது. 

இதையும் படிங்க: இரவில் இந்த 3 பொருளையும் நீரில் ஊறவிட்டு, காலையில் எழுந்ததும் குடித்தால்.. உடம்பு தங்கம் மாதிரி ஜொலிக்கும்!!

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios