பாலை விட கேழ்வரகு தான் சிறந்தது; ஏன்?
பாலில் உள்ள கால்சியத்தை விட கேழ்வரகில் அதிக கால்சியம் உள்ளது.
கேழ்வரகை தினமும் உணவில் சேர்த்து வந்தால் உடல் வலிமை பெரும். கேழ்வரகு நோய் எதிர்ப்பு சத்தியை அதிகரிக்கிறது.
உடல் சூட்டை தணிக்கிறது. குழந்தைகளுக்கு கேழ்வரகுடன் பால், சர்க்கரை சேர்த்து கூழாக காய்ச்சி கொடுக்கலாம்.
இது குழந்தை வளர்ச்சிக்கு பெரிதும் துணை புரியும். நாள்தோறும் கேழ்வரகு கூழ் சாப்பிட்டு வர குடற்புண் குணமடையும்.
அதிக எடை இருப்பவர்கள் எடையை குறைக்க விரும்பினால் கேழ்வரகு சாப்பிடலாம். இது உடல் எடையை குறைக்கும்.
கேழ்வரகில் உள்ள நார் சத்துக்கள் மலசிக்கலை தடுக்க வல்லது.
இதில் இரும்பு சத்து அதிகம் உள்ளது இது இரத்த சோகை நோய் வரமால் தடுக்கிறது. இதில் அதிக அளவு கால்சியம், இரும்பு சத்து உள்ளன.
குடலுக்கு வலிமை அளிக்கும். உடலில் உஷ்ணத்தை சமநிலையில் வைத்திருக்கும்.
தானியங்களில் அதிக சத்துமிக்கது கேழ்வரகு. இதில் புரதம், தாது உப்பு, சுண்ணாம்புச் சத்து, இரும்புச் சத்து மற்றும் உயிர்ச் சத்துக்களும் இருக்கின்றன.