கல்லீரலில் கொழுப்பு சேர்ந்திருக்கிறதா ? இந்த 5 அறிகுறிகள் இருந்தால் உஷார்!
துரித உணவுகள் மற்றும் ஒழுங்கற்ற உணவுப் பழக்கம் கல்லீரலில் கொழுப்பைச் சேர்த்து, கொலஸ்ட்ரால் பிரச்னைக்கு வழிவகுக்கிறது. உடல் பருமன், சோர்வு, வலி, முகப்பரு மற்றும் பசியின்மை போன்ற அறிகுறிகள் கல்லீரல் பாதிப்பைக் குறிக்கின்றன.
மனித உடலை எடுத்துக்கொண்டால், அதன் உள் உறுப்புகளில் பெரியது கல்லீரல் தான். நம் உடலை ஆரோக்கியமாக வைத்து கொள்வதில் இந்த கல்லீரலின் பங்கும் அதிகம் எனலாம். ஆம்! நாம் சாப்பிடும் உணவு ஜீரணமாவதற்கு தேவையான செரிமானத்திற்கான ஃப்ளூயிட்டை சுரப்பதிலிருந்து, உடலில் சேர்ந்திருக்கும் நச்சுக்களை வெளியேற்றுவது வரைக்கும் கல்லீரல் பெரும் பணியாற்றுகின்றது.
உணவு பழக்கமும் ஆரோக்கியமும்:
ஆனால் இன்றைய நாட்களில் நிலவி வரும் வாழ்க்கை முறை மற்றும் பணிச்சுமை துரித உணவுகளை மனிதன் நாடி செல்ல முக்கிய காரணமாகின்றது. இதுத்தவிர, இன்று ஆரோக்கியத்தின் மீதான மோகத்தை விட, எல்லா ஹெவி மீல்சையும் உண்டுவிட வேண்டும் என்பதில் மனிதனுக்கு கூடுதல் பிரியம் இருந்து வருகிறது. இந்த ஒழுங்கற்ற உணவு முறை, கண்ட நேரத்தில் கண்டதை தின்பது என உணவில் நேர மேலாண்மை இல்லாமை இவை அனைத்தும் உடலை பல விதமாக வாட்டி வதைத்து வருகிறது. உடலின் தோற்றம் தொடங்கி , உறுப்புகளின் செயல்பாடு என அனைத்துக்கும் சவாலாகவும் விளங்கி வருகிறது எனலாம்.
கல்லீரலுக்கு காத்திருக்கும் ஆபத்து:
துரித உணவுகள், ஹெவி மீல்ஸ் என அடிக்கடி உட்கொள்ளும் போது உடலில் கொழுப்பு சேர்கிறது. இந்த கொழுப்பு சேர சேர தான் கொலஸ்ட்ரோல் பிரச்னை வருகிறது. இது கல்லீரலை வெகுவாகவே பாதிக்கிறது. ஆம்! கொழுப்பை கரைக்க உதவும் ஃப்ளூயிட்டை சுரந்து அதை பித்தப்பையில் சேமித்து வைப்பதுதான் கல்லீரலின் பணி. ஆனால் அதிகமான கொழுப்பு உடலில் சேரும் போது, அது கல்லீரல் மட்டுமின்றி உடல் ஆரோக்கியத்தையே முழுவதுமாக சீர்குலைத்து விடுகிறது. இப்படித்தான் ஒரு கட்டத்தில் hepatic steatosis ( fatty liver ) ஏற்பட்டு கல்லீரல் செயலிழப்பு நிலை வரைக்கும் எடுத்து செல்கிறது.
கல்லீரலில் கொழுப்பு சேர்ந்திருக்கிறதா?
ஒருசிலர், எனக்குதான் மது பழக்கம் இல்லையே அதனால் கல்லீரல் நோய் வர வாய்ப்பே இல்லை என்று தன்னம்பிக்கையாக சொல்லலாம். ஆனால், இந்த கல்லீரல் நோயை பொறுத்தவரைக்கும் இரண்டு வகைகள் இருக்கின்றது. காரணம், உடல் பருமன் பிரச்னையும் கல்லீரல் பிரச்னைக்கு வழிவகிக்கிறது.
நோயின் 5 அறிகுறிகள்:
Fatty liver பிரச்னையை பொறுத்தவரைக்கும் நம் உடலில் ஏற்படும் சில மாற்றங்கள் அந்த நோயின் தன்மையை எடுத்து காட்டிவிடுகின்றன.
உடல் எடை:
திடீரென அதிகரிக்கும் உடல் எடை, குறிப்பாக வயிற்றின் அடிப்பக்கத்தில் பருமன் ஏற்பட்டால் உஷாராக இருக்க வேண்டும். உணவு கட்டுப்பாடு, உடற்பயிற்சிகள் செய்தும் பருமன் குறையாமல் இருக்கிறது என்றால் அது fatty liver-க்கான அறிகுறி!
சோர்வு:
ஒருவேளை தீராத சோர்வு, உடல் வலுவிழந்திருப்பது போன்றிரிப்பது, அடிக்கடி ஏற்படும் மயக்கம் இவையும் fatty liver- க்கான ஆரம்பகால அறிகுறிகளே. அதாவது, இந்த அறிகுறிகள் உங்கள் கல்லீரல் மிகவும் மோசமாகி கொண்டிருக்கின்றது என்பதை உணர்த்துகிறது.
வலி :
உங்கள் வலது விலா எலும்பு பகுதியில் வலி அல்லது ஏதேனும் அசெளகரியத்தை உணர்கிறீர்கள் என்றால், அது உங்கள் கல்லீரலில் ஏற்பட்டிருக்கும் வீக்கத்திற்கான அறிகுறி.
முகப்பரு :
திடீரென தோன்றும் முகப்பரு, கருமையான தோல் மடிப்புகள், மற்றும் அதிகமான முடி கொட்டுதல் கூட fatty liver - க்கான அறிகுறிகளே
பசியின்மை :
அடிக்கடி ஏற்படும் வாந்தி உணர்வு, உணவு எடுத்து கொண்டதும் வரும் குமட்டல், பசியின்மை ஆகிய அறிகுறிகளும் உங்கள் கல்லீரலின் நிலை ஆரோக்கியமற்றிருக்கிறது என்பதை குறிக்கின்றது.