Reasons for skin dryness in summer
கோடைக் காலத்தில் சருமம் எதனால் வறட்சி அடைகிறது என்று தெரிந்து கொண்டு அதற்கேற்றாற் போல வைத்தியாம் பார்த்தால் எளிதில் தீர்வு காணலாம்.
சருமம் வறட்சிக்கான காரணங்கள்
அ.. அதிகப்படியான வெப்பம் உடலில் உள்ள நீர்ச்சத்துக்களை உறிஞ்சி வறட்சியை ஏற்படுத்தும்.
ஆ. சிலருக்கு உதடுகளானது வறட்சியடையும். இதற்கு உடலில் போதிய நீர்ச்சத்து இல்லை என்று அர்த்தம்.
இ. அளவுக்கு அதிகமாக வெயிலில் சுற்றும் போது, அது சருமத்தில் உள்ள நீர்ச்சத்துக்களை உறிஞ்சி, இறுதியில் சருமத்தில் வறட்சியை ஏற்படுத்துவதுடன், சரும புற்றுநோய்களையும் ஏற்படுத்திவிடுகிறது.
ஈ. கோடையில் தாகம் அதிகம் எடுக்கும். ஏனெனில் வியர்வை அதிகம் வெளியேறுவதால், அது தாகத்தின் மூலம் உடலுக்கு நீர்ச்சத்து வேண்டும் என்று வெளிப்படுத்தும். அப்படி வெளிப்படுத்தும் போது தண்ணீர் சரியாக குடிக்காமல் இருந்தால், அது அடுத்த கட்டமாக சருமத்தில் வறட்சியை ஏற்படுத்தும்.
உ.. கோடைக்காலத்தில் வெப்பம் அதிகம் இருப்பதால், பலர் ஏ.சியில் தான் இருக்க விரும்புவோம். இதற்காக வீட்டில் கூட ஏர் கூலர் வாங்கி வைத்துக் கொள்வோம். ஆனால் ஏ.சியில் இருந்து வெளிவரும் காற்றானது சருமத்தில் உள்ள எண்ணெய் பசையை உலர செய்து, வறட்சியை ஏற்படுத்தும்.
எ. சில மக்கள் சுறுசுறுப்புடன் செயல்பட சுடுநீரில் குளிப்பார்கள். ஆனால் கோடையில் அப்படி சுடுநீரில் குளிப்பார்கள். அதனாலும் சருமம் வறட்சியடையும்.
ஏ. பொதுவாக கோடையில் வெயிலில் சுற்றி திரிவதால், சருமத்தில் உள்ள இறந்த செல்களை வெளியேற்ற ஸ்கரப் செய்வோம். ஆனால் இதை அளவுக்கு அதிகமாக செய்த பின், வெயிலானது சருமத்தில் பட்டால், அது சருமத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தும்.
ஐ. சோப்புக்களை அதிகம் பயன்படுத்தினால், சருமத்தில் உள்ள இயற்கை எண்ணெயானது வெளியேறி, வறட்சியடைய ஆரம்பிக்கும். ஆகவே சோப்புக்களை அளவாக பயன்படுத்துங்கள்.
