Asianet News TamilAsianet News Tamil

முட்டைகோஸை ஜூஸ் போட்டு குடித்தால் எவ்வளவு நல்லதுனு தெரிஞ்சுக்க இதை படிங்க...

Read on to find out how good it is to put cabbage juice.
Read on to find out how good it is to put cabbage juice.
Author
First Published Sep 8, 2017, 1:41 PM IST


* முட்டைக்கோஸ் ஜூஸை வெறும் வயிற்றில் குடித்து வந்தால், அது உயர் கொலஸ்ட்ரால் பிரச்சனையை தடுத்து, கல்லீரலை சுத்தம் செய்கிறது.

* முட்டைக்கோஸில் கலோரிகள் குறைவாக உள்ளதால், உடல் எடையைக் குறைக்க நினைப்போர் தினந்தோறும் முட்டைக்கோஸ் ஜூஸைக் குடிக்கலாம்.

* முட்டைக்கோஸ் ஜூஸில் உள்ள க்ளுக்கோஸினோலேட்டுகள், உடலின் நோயெதிர்ப்பு மண்டலத்தை வலிமையடையச் செய்து, உடலை நோய்க்கிருமிகளின் தாக்கத்தில் இருந்து பாதுகாக்க உதவுகிறது.

* முட்டைக்கோஸில் லாக்டிக் அமிலம் அதிகம் உள்ளது. எனவே இது குடலில் உள்ள நோய்த்தொற்றுக்களை அழித்து, குடலின் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.

* முட்டைகோஸை நீரில் போட்டு சிறிது நேரம் ஊறவைத்து அந்த நீரைக் கொண்டு முகம் கழுவினால் வறட்சியான சருமம் பளபளப்படையும். சரும வறட்சியை நீக்கும். சருமத்திற்கு பொலிவைக் கொடுக்கும்.

* முட்டைக்கோஸ் ஜூஸ் சுவாசப் பாதையில் உள்ள அழற்சியை சரிசெய்து, மூச்சுக்குழாய் அழற்சி அல்லது ஆஸ்துமா பிரச்சனையில் இருந்து விடுபட உதவுகிறது.

* முட்டைக்கோஸில் உள்ள க்ளுட்டமைன் என்னும் அமினோ அமிலம், செரிமான மண்டலத்தின் ஆரேக்கியத்தை மேம்படுத்தி, செரிமான பிரச்சனை வராமல் தடுக்கிறது.

* இதில் சுண்ணாம்புச்சத்து அதிகமிருப்பதால் எலும்புகளும் பற்களும் உறுதியாகும்.

* முட்டைக்கோஸில் உள்ள சல்ஃபோரபேன், குறிப்பிட்ட புற்றுநோய்களின் தாக்கங்களைத் தடுக்கிறது என்று ஆய்வுகள் கூறுகின்றது.

* முட்டைக்கோஸ் ஜூஸில் உள்ள நோயெதிர்ப்பு அழற்சி பொருள், ஆர்த்ரிடிஸ் போன்ற உள்காயங்களை சரிசெய்து, மூட்டு அழற்சி பிரச்சனைகளை சரிசெய்ய உதவுகிறது.

* அல்சர் இருப்பவர்கள் முட்டைக்கோஸ் ஜூஸை வெறும் வயிற்றில் குடித்து வந்தால், அல்சரை ஏற்படுத்திய பாக்டீரியாக்கள் அழித்து, அல்சர் பிரச்சனையை குணமாக்குகிறது.

Follow Us:
Download App:
  • android
  • ios