வயதைப் பொறுத்து ஒரு நபர் ஒருநாளைக்கு எவ்வளவு புரதம் சாப்பிட வேண்டும். இதுகுறித்து நிபுணர்கள் என்ன சொல்லுகிறார்கள் என்று இங்கு காணலாம்.

புரதம் நம் உடலுக்கு அவசியமானது. ஏனெனில் நம்முடைய உடல் ஆரோக்கியமாக இருப்பதற்கு இது முக்கிய பங்கு வகிக்கிறது. நம்முடைய உடலில் எலும்புகள், தசைகள், தசை நாண்கள், உறுப்புகள், முடி, சதை, போன்றவற்றிற்கு புரதம் அவசியம். புரதம் நிறைந்த உணவுகளை அன்றாட உணவில் சேர்த்துக் கொண்டால் ஊட்டச்சத்து குறைபாட்டை பெருமளவும் குறைக்க முடியும். சரியான அளவு புரதம் எடுத்துக் கொண்டால் உடலும் ஆரோக்கியமாக இருக்கும், நோய் எதிர்ப்பு சக்தியும் அதிகரிக்கும். நிபுணர்களின் கூற்றுப்படி, வயதிற்கு ஏற்ப ஒரு நபர் ஒரு நாளைக்கு எவ்வளவு புரதம் எடுத்துக் கொள்ள வேண்டும் என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.

ஒரு நபர் ஒரு நாளைக்கு எவ்வளவு புரதம் சாப்பிடலாம்?

ஒருவருக்கு அன்றாட வாழ்வில் எவ்வளவு புரதம் தேவை என்பது அவரது வயது பாலினம் மற்றும் அவர் எவ்வளவு உடல் செயல்பாடு செய்கிறார் என்பதைப் பொறுத்து மாறுபடும்.

ஆண்களுக்கான புரதத் தேவை:

- நீண்ட நேரம் ஒரே இடத்தில் உட்கார்ந்து வேலை செய்பவர்கள் தங்களது உடல் எடையில் ஒரு கிலோவிற்கு சுமார் 0.8 கிராம் புரதம் தேவைப்படும்.

- உடலை சுறுசுறுப்பாக வைத்திருப்பவர்கள் 1.2 கிராம் முதல் 1.4 கிராம் புரதம் தேவைப்படும்.

- பாடி பில்டர், தடைகளை வீரர்கள் தங்களது உடல் எடையின் ஒரு கிலோவிற்கு 1.6 முதல் 2.2 கிராம் புரதம் தேவைப்படும்.

பெண்களுக்கான புரதத் தேவை:

- உடல் செயல்பாடு செய்யாத பெண்கள் தங்களது உடல் எடையின் ஒரு கிலோவிற்கு 0.8g புரதம் தேவை.

- அலுவலகம், வீட்டு வேலை போன்ற உடல் செயல்பாடு செய்பவர்கள் தங்களது உடல் எடையில் ஒரு கிலோ விருது 1.0 முதல் 1.2 கிராம் புரதம் தேவை.

- குழந்தையை பெற்ற தாய்மார்கள் 1.1 முதல் 1.3 கிராம் புரதம் தேவை

- விளையாட்டு வீராங்கனைகள் 1.6 முதல் 2.2 கிராம் புரதம் தேவை.

வயதானவர்களுக்கான புரதத் தேவை:

மருத்துவர்களின் கூற்றுப்படி ஆணாக இருந்தாலும் சரி பெண்ணாக இருந்தாலும் சரி 60 வயதிற்கு மேற்பட்டவர்கள் ஒரு கிலோ உடல் எடைக்கு சுமார் 1.0 முதல் 1.2 கிராம் புரதம் தேவைப்படுகிறது.

குழந்தைகளுக்கான புரதத் தேவை:

குழந்தைகளுக்கு புரத தேவைகள் அவர்களின் வயதை பொருத்தும் மாறுபடும். அதாவது 1-3 வயது வரை இருக்கும் குழந்தைகளுக்கும் 13 கிராம் புரதம் தேவை. 4 முதல் 8 வயது வரை இருந்தால் 19 கிராம் புரதம் தேவை. இளம் பருவத்தினருக்கு 52 கிராம் புரதம் தேவைப்படும்.

இந்த அளவுகள் பொதுவானவை என்பதால், உங்களது தனிப்பட்ட புரத தேவைகளை தெரிந்து கொள்ள ஒரு நல்ல மருத்துவர் உள்ளது ஊட்டச்சத்து நிபுணரை அணுகுவது நல்லது.