- Home
- Lifestyle
- Protein Rich Foods : முட்டைக்கு பதிலா இந்த சைவ உணவுகளை சாப்பிடுங்க! புரதம் கொட்டி கிடக்கு
Protein Rich Foods : முட்டைக்கு பதிலா இந்த சைவ உணவுகளை சாப்பிடுங்க! புரதம் கொட்டி கிடக்கு
முட்டையை விட புரதம் அதிகம் கொண்ட 4 சைவ உணவுகளை குறித்து இந்த பதிவில் காணலாம்.

Protein Rich Foods
முட்டை அசைவ பிரியர்களுக்கு ரொம்பவே பிடித்த சூப்பர் ஃபுட். இதில் ஏராளமான ஊட்டச்சத்துக்கள் உள்ளன. குறிப்பாக ஒரு முட்டையில் சுமார் 6 கிராம் புரதம் இருக்கிறது. இருந்தபோதிலும் இதை நிறைய பேர் இதை விரும்புவதில்லை. அதிலும் அம்மாக்கள் தங்களுடைய பிள்ளை முட்டையை சாப்பிடுவது இல்லை என்று புலம்புகிறார்கள். ஆனால் முட்டையை விட சில சைவ உணவுகளில் புரதம் கொட்டிகிடைக்கிறது. அப்படி முட்டையை அதிக புரதம் நிறைந்துள்ள 4 சைவ உணவுகளை பற்றி இங்கு காணலாம்.
பூசணி விதைகள்
பூசணி விதைகள் அளவில் சிறியதாக இருந்தாலும் ரொம்பவே சத்தானது. 28 கிராம் பூசணி விதையில் சுமார் 8.5 கிராம் புரதம் உள்ளன. இது ஒரு முட்டையை விட அதிகமாகும். அதுமட்டுமின்றி இதில் இரும்புச்சத்து, துத்தநாகம், மெக்னீசியம், பொட்டாசியம், செலினியம், ஜிங்க், தாமிரம் போன்ற பிற ஊட்டச்சத்துக்களும் உள்ளது. எனவே இதை நீங்கள் சாலட், ஸ்மூத்தி போன்றவற்றில் சேர்த்து கொள்ளலாம். இரத்த சர்க்கரை அளவை சமப்படுத்தவும், இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் பூசணி விதைகள் உதவுவதாக ஆய்வுகள் சொல்லுகின்றன.
பாதாம்
பாதாம் புரதத்தின் சிறந்த மூலமாக கருதப்படுகிறது. 32 கிராம் பாதாம் பருப்பில் 7 கிராம் புரதம் உள்ளன. இது ஆரோக்கியமான கொழுப்புகள், நார்ச்சத்து, வைட்டமின் ஈ, மெக்னீசியம் போன்றவற்றை கொண்டுள்ளன. இதை இரவு முழுவதும் தண்ணீரில் ஊற வைத்து பிறகு வெறும் வயிற்றில் சாப்பிடலாம். ஸ்மூத்தியில் சேர்த்து கூட குடிக்கலாம். பாலுடன் கலந்தும் குடிக்கலாம். தினமும் பாதம் சாப்பிட்டு வந்தால் சருமம் பளபளக்கும், உடலுக்கு தேவையான ஆற்றல் கிடைக்கும்.
பன்னீர்
பன்னீர் முட்டையை விட அதிக புரதத்தை கொண்டுள்ளது. இந்திய உணவுகளில் இது சிறப்பு இடத்தை பிடித்துள்ளது. 100 கிராம் பன்னீரில் 18 கிராம் புரதம் உள்ளன. மேலும் இதில் ஆரோக்கியமான கொழுப்புகள் கால்சியம் நிறைந்துள்ளன. பன்னீரில் புரதம் இருந்தாலும் கூட இது முழு கொழுப்புள்ள பாலில் இருந்து தயாரிக்கப்படுவதால் இதில் கொழுப்பு அதிகமாகவே இருக்கும்.
கொண்டக்கடலை
முட்டையை விட அதிக புரதம் கொண்ட உணவில் கொண்டக்கடலையும் இடம்பெறும். அரை கப் சமைத்த கொண்டக்கடலையில் சுமார் 8 கிராம் புரதம் உள்ளன. இதில் நார்ச்சத்தும் அதிகமாகவே உள்ளதால் அது செரிமானத்தை மேம்படுத்த உதவுகிறது. தினமும் ஒரு கிண்ணம் கொண்டைக்கடலை சாப்பிட்டு வந்தால் உடல் ஆரோக்கியமாக இருக்கும்.