Asianet News TamilAsianet News Tamil

முப்பது வயதுக்கு மேலுள்ள பெண்களே பிளீஸ் கவனியுங்கள்; ஆண்களும் தெரிஞ்சுக்கலாம் தவறில்லை...

Pay attention to women above thirty years It is not wrong to find men ...
Pay attention to women above thirty years It is not wrong to find men ...
Author
First Published Mar 30, 2018, 1:24 PM IST


"பெண்கள் நாட்டின் கண்கள்" என்று சும்மாவா சொன்னாங்க பெரியவங்க. வீட்டு பிரச்சனையில் இருந்து அலுவலக பிரச்சனை வரை அனைத்தையும் தனியாகவே சமாளித்து வெற்றி காண்பவர்கள் பெண்கள். ஆனால், அவர்கள் தங்களது உடலின் மீது மட்டும் எப்போதும் அக்கரை எடுத்துக்கொள்வதே இல்லை.

ஒவ்வொரு பெண்ணும் பருவம் எய்திய காலம் முதல் நிறைய ஹார்மோன் மாற்றங்களை சந்தித்து வருகின்றனர். அதுவும் குறிப்பாக கர்ப்பக் காலத்தில் அவர்கள் நிறைய வலியைப் பொறுத்துக் கொண்டாலும் அதில் சந்தோஷம்தான் அடைகின்றனர். பின்னர், மாதவிலக்கு நின்ற பிறகும் பல பிரச்சனைகளை எதிர் கொள்கின்றனர்.

பெண்கள் அனைவரும் 30 வயது அடைந்ததும் தங்களது உடலின் மீது அதிக அக்கறை எடுத்துக் கொள்ள வேண்டியது மிக அவசியம். அப்படி எடுத்துக் கொண்டால் நிறைய நோய்களை சுலபமாக தடுத்துவிடலாம். இதனால் எதிர் காலத்தில் எந்த கடுமையான நோயும் ஏற்படாமல் நலமுடன் வாழலாம்.

அப்படி பெண்கள் நிச்சயம் மேற்கொள்ள வேண்டிய சில முக்கிய மருத்துவ பரிசோதனைகள் இரண்டு. அவை 

1.. இரத்த அழுத்தம் மற்றும் இருதயம்

பெண்கள் கண்டிப்பாக மேற்கொள்ள வேண்டிய பரிசோதனைகளில் ஒன்று தான் இரத்த அழுத்தத்தை பரிசோதிப்பது. அப்படி உங்களுக்கு உயர் இரத்த அழுத்தம் இருந்தால் நீங்கள் கண்டிப்பாக மின் ஒலி இதய வரைவு எனும் யகோகார்டியோகிராம் செய்து உங்களது இருதய ஆரோக்கியத்தைப் பரிசோதித்துப் பார்ப்பது அவசியம். ஏனெனில், உயர் இரத்த அழுத்தம் இருந்தால் இருதய பிரச்சனைகள் ஏற்படக்கூடும்.

2.. எலும்பு அடர்த்தி பரிசோதனை

போன் டென்ஸிட்டி எனும் எலும்பு அடர்த்திக்கு வைட்டமின் டீ மிக அவசியம். வைட்டமின் டீ சத்து குறைவாக இருந்தால் அவர்களின் எலும்பு பலவீனமாக இருக்கும். ஆஸ்டியோபோரோசிஸ் ஏற்பட வாய்ப்புகள் அவர்களுக்கு அதிகம் இருக்கும். எனவே, எலும்பு அடர்த்தி பரிசோதனை கண்டிப்பாக செய்ய வேண்டும்.

Follow Us:
Download App:
  • android
  • ios