Oil bath cure dandruff and make grow hair
** வாரம் இரண்டு நாள்கள் எண்ணெய் தேய்த்து குளித்தால் ரொம்ப நல்லது. புதன், சனி ஆகிய நாட்களில் ஆண்களும், செவ்வாய், வெள்ளி கிழமைகளில் பெண்களும் எண்ணெய் தேய்த்து குளிப்பது உடலுக்கு நல்லது.
** ஆனால், இன்றை காலத்தில் தீபாவளிக்கு மட்டுமே நினைவுக்கு வருகிற விஷயமாக மாறிவிட்டது எண்ணெய் குளியல்.
** எண்ணெய் குளியல் எடுப்பதால் ஒருவருக்கும் ஜலதோஷம் பிடிக்காது.
** அதை ஒரு முறையான பழக்கமாக்கிக் கொள்ள வேண்டும். உடலில் எண்ணெய் தடவப்படும்போது, உடலின் மேற்பரப்பு குளிர்ச்சி அடைகின்றது. இந்த குளிர்ச்சி, உடலின் உள் உறுப்புகளில் உள்ள அதிகப்படியான வெப்பம் வெளிப்படுவதால் சமன் செய்யப்படுகின்றது. இவ்வாறு உடலின் உள்ளுறுப்புகள் குளிர்ச்சி அடைகின்றன. எண்ணெய் குளியலை முறைப்படுத்திக் கொண்டால் மன அமைதி கிடைக்கும்.
** உடல் குளிர்ச்சியடையும்.
** கண்கள் குளுமை பெறும்.
** பொடுகு நீங்கும். அதன் விளைவாக இளநரை வராமலிருக்கும்.
** முன்னந்தலையில் வழுக்கை விழாது.
** இந்த விசயங்களை எல்லாம் தொலைத்துவிட்டு இன்று மன அமைதிக்கும், இளநரையை போக்கவும், வழுக்கையில் முடி வளர்க்கவும் நவீன மருத்துவமனைகளை தேடி ஓடுகிறோம் என்பதே வேடிக்கை.
