Asianet News TamilAsianet News Tamil

ருசிக்கு மட்டுமல்ல ஆரோக்கியத்திற்கும் சின்ன வெங்காயம் தான் பெஸ்ட்…

Not only is the red onion to taste the best of health
not only-is-the-red-onion-to-taste-the-best-of-health
Author
First Published Apr 11, 2017, 1:59 PM IST


உணவில் ருசியைக் கூட்டி, வாசனையைச் சேர்க்கும் சின்ன வெங்காயம் அதிக மருத்துவக் குணங்களைக் கொண்டது.

அப்படிப்பட்ட சின்ன வெங்காயத்தின் மருத்துவ குணங்கள்:

1.. சின்ன வெங்காயத்தை 15 நாட்களுக்கு ஒருமுறை நெய் அல்லது எண்ணெயில் வதக்கி உணவுடன் சேர்த்து சாப்பிட்டு வந்தால் என்றும் இளமையுடன் இருக்கலாம்.

2.. உடல் சூட்டைக்  குறைக்கவல்லது சின்ன வெங்காயம்.

3.. பழைய சாதத்தில் மோர் விட்டு, நான்கு சின்ன வெங்காயத்தை நறுக்கிப் போட்டு சாப்பிட்டால் உடலின் வெப்பம் தணியும். நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.  ரத்த ஓட்டத்தை சீராக்கும்.

4.. கணையத்துக்கு உள்ளே இருக்கும் செதிலில் பசை அல்லது அழுக்கு சூழப்பட்டு இருந்தால், இன்சுலின் சுரக்காது. இதனை இயல்பான நிலைக்கு மாற்றி சர்க்கரையின் அளவைக் கட்டுக்குள் வைக்க சின்ன வெங்காயம் உதவுகிறது.

5.. கல்லீரலில் இருக்கும் பித்தத் திரவம் அதிகமாக சுரந்தால், காமாலை வரும். இந்த பித்தத் திரவத்தை இயல்பான நிலையில் சுரக்கவைப்பது சின்ன வெங்காயம்.

6.. வயிற்றுப்புண், வெள்ளைப்படுதல், கண் நோய் போன்ற பாதிப்பிலிருந்து விடுபட, தினமும் உணவில் சின்ன வெங்காயம் சேர்ப்பது அவசியம். 

7.. அம்மை நோய் வராமல் தடுக்கவும் , வந்தால் சீக்கிரம் குணமாகவும் சின்ன வெங்காயம் உதவுகிறது.

Follow Us:
Download App:
  • android
  • ios