Asianet News TamilAsianet News Tamil

இனி வெங்காய தோலை தூக்கி எறிய வேண்டாம்! இப்படி பயன்படுத்தி உடல் ஆரோக்கியம் பெறுங்கள்...

Never sweep the onion! Get body health
Never sweep the onion! Get body health
Author
First Published May 24, 2018, 1:44 PM IST


வெங்காயம் ஏராளமான ஆரோக்கிய நன்மைகளை உள்ளடக்கியது.

பொதுவாக வெங்காயத்தைப் பயன்படுத்தும் போது, அதன் தோலை தூக்கி எறிந்து விட்டு, அதனுள் உள்ளதை தான் பயன்படுத்துவோம். 

ஆனால், இனிமேல் அந்த வெங்காய தோலை நீங்கள் தூக்கி எறியமாட்டீர்கள்? 

எப்படின்னு இதை வாசிங்க தெரியும்...

பல அடுக்குகளைக் கொண்டது தான் வெங்காயம். ஆய்வுகளில் வெங்காயத்தில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் அதிகமான அளவில் இருப்பதாக தெரிவிக்கின்றன. இதனால் இதனை அன்றாட உணவில் சேர்க்கும் போது உடலின் ஆரோக்கியம் மேம்படுகிறது.

வெங்காயத்தின் வெளிப்புறத்தில் உள்ள ப்ரௌன் நிற அடுக்கில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள், நார்ச்சத்துக்கள் மற்றும் ஃப்ளேவோனாய்டுகள் போன்ற சரும ஆரோக்கியத்திற்கு தேவையான அனைத்து சத்துக்களும் வளமான அளவில் உள்ளன.

வெங்காயத்தின் தோலில் உள்ள ஆற்றல்மிக்க நிறமியான க்யூயர்சிடின், தமனிகளில் அடைப்புக்கள் ஏற்படுவதைத் தடுக்கும் மற்றும் உயர் இரத்த அழுத்தத்தைக் குறைக்கும், சக்தி வாய்ந்த மயக்க மருந்து பண்புகள் உள்ளன மற்றும் தூக்கமின்மையை சரிசெய்யும்.

வெங்காயத் தோலில் ஆற்றல் மிக்க ஆன்டி-பாக்டீரியல், ஆன்டி-ஆக்ஸிடன்ட், புற்றுநோய் எதிர்ப்பு பண்புகள் மற்றும் பூஞ்சை எதிர்ப்பு பண்புகள் போன்றவை ஏராளமான அளவில் உள்ளன.

வெங்காயத்தின் தோலில் உள்ள சக்தி வாய்ந்த ப்ளேவோனாய்டு மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட் தன்மையை உள்ளடக்கிய க்யூயர்சிடின், புற்றுநோய்க்கு காரணமான செல்களை அழித்து, புற்றுநோய் வரும் அபாயத்தைக் குறைக்கும்.

வெங்காயத்தின் தோலில் இருக்கும் கரையாத நார்ச்சத்து, குடலியக்கத்தின் செயல்பாட்டிற்கு உறுதுணையாக இருந்து, குடல் சம்பந்தமான பிரச்சனைகள் வராமல் தடுக்கும். 

வெங்காயத் தோலில் உள்ள கரையாத நார்ச்சத்து பெருங்குடலில் தேங்கியிருக்கும் டாக்ஸின்களை வெளியேற்றும், pH அளவை சீராக பராமரிக்கும்.

டைப்-2 நீரிழிவு, இதய நோய்கள், இரையக குடலிய பிரச்சனைகள், உடல் பருமன், குடல் புற்றுநோய் போன்ற பிரச்சனைகளின் அபாயத்தையும் குறைக்கும் சக்தி வெங்காயத் தோலுக்கு உண்டு. 

வெங்காயத்தின் தோலை சூப் வடிவிலோ அல்லது தேநீர் வடிவிலோ எடுக்கலாம். 

வெங்காய தோல் டீ

முதலில் வெங்காயத்தின் தோலை ஒரு பாத்திரத்தில் போட்டுக் கொள்ள வேண்டும். பின் அதில் கொதிக்கும் நீரை ஊற்றி, மூடி வைத்து 15 நிமிடம் கழித்து, அந்நீரை வடிகட்டி, தேன் கலந்து, இரவில் படுக்கும் முன் ஒரு கப் குடிக்க வேண்டும்.

Follow Us:
Download App:
  • android
  • ios