Asianet News TamilAsianet News Tamil

இதயத்தை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள உதவும் நேச்சுரல் ஜூஸ்; குடிச்சு பாருங்க உங்களுக்கே மாற்றம் தெரியும்... 

Natural juice to help keep the heart healthy Look at the ice and you know the change ...
Natural juice to help keep the heart healthy Look at the ice and you know the change ...
Author
First Published Jun 26, 2018, 2:27 PM IST


இதயத்தை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள இந்த ஜூஸை குடியுங்கள்.. 

தேவையானப் பொருட்கள்

பசலைக் கீரை ஜூஸ் – 1/2 டம்ளர்

வறுத்த ஆளி விதை – 1 டேபிள் ஸ்பூன்.

செய்முறை

ஒரு டம்ளர் பசலைக் கீரையுடன் குறிப்பிட்ட அளவு ஆளி விதை சேர்க்க வேண்டும். நன்கு கலக்கி கொள்ளுங்கள். இந்த ஜூஸை தினமும் காலை உணவிற்கு பின் குறைந்தது 2 மாதத்திற்கு குடிக்கவேண்டும்.

பலன்கள்:

1.. இதயம் ஆரோக்கியமாகும்

இந்த ஜூஸை தினமும் குடித்து வரும் போது இயற்கையான முறையில் இதய இரத்தத்தில் உள்ள கொழுப்புகள் கரைக்கப்பட்டு இதயம் ஆரோக்கியமாக இருக்கும். 

2..  இரத்த ஓட்டம் சீராகும்

இந்த ஜூஸை குடிக்கும் நீங்கள் கண்டிப்பாக கொழுப்பு சத்து நிறைந்த உணவுகள், எண்ணெய் பலகாரங்கள் போன்றவற்றை தவிர்க்க வேண்டியது அவசியம். மேலும், தினமும் உடற்பயிற்சி செய்வது உடல் பருமன் அதிகரிக்காமல் தடுத்து உடலில் இரத்த ஓட்டத்தை சீராக்கும்.

3.. இரத்தத்தை சுத்தமாக்கும் :

பசலைக் கீரையில் புரதச்சத்து, இரும்புச் சத்து, பொட்டாசியம், மக்னீசியம் மற்றும் கால்சியம் ஆகியவை அதிக அளவில் உள்ளது. பசலைக் கீரை உடலில் ஆரோக்கியமான இரத்த செல்களின் உற்பத்தியை அதிகரிக்க உதவும். 

ஆளி விதையில் நார்ச்சத்துக்களும், வைட்டமின் ஈ இரண்டுமே இரத்தக் குழாய்களில் சேர்ந்திருக்கக்கூடிய அசுத்தங்களை அகற்றி, இரத்தத்தை சுத்தமாக்கும். 
 

Follow Us:
Download App:
  • android
  • ios