Mobile Phone: டாய்லெட்டை விடவும் ஆபத்தானது மொபைல் போன்கள்: எச்சரிக்கிறது ஆய்வு முடிவுகள்!

இளைஞர்களின் கையில் இருக்கும் மொபைல் போன்களில், கழிவறையில் இருக்கும் கிருமிகளை விட ஏறக்குறைய 10 மடங்கு அதிகமான கிருமிகள் இருப்பதாக ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.

Mobile phones are even more dangerous than toilets: Study results warn!

வளர்ந்து வரும் தொழில்நுட்ப உலகில், மொபைல் போன் இல்லாத ஒருவரையும் நாம் காண்பது அரிது. அந்த அளவிற்கு மொபைல் போன்களின் ஆதிக்கம் அதிகரித்துள்ளது. குறிப்பாக, இளைஞர்களிடையே மொபைல் போன் பயன்பாடு நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. ஆனால், மொபைல் போனில் உள்ள ஆபத்துகளை பலரும் அறிந்திருக்கவில்லை. அவ்வகையில், தற்போது வெளிவந்துள்ள ஒரு ஆய்வு முடிவு, பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது, இளைஞர்களின் கையில் இருக்கும் மொபைல் போன்களில், கழிவறையில் இருக்கும் கிருமிகளை விட ஏறக்குறைய 10 மடங்கு அதிகமான கிருமிகள் இருப்பதாக ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.

மனிதனோடு ஒன்றிணைந்த மொபைல் போன்

தற்போதுள்ள நவீன காலத்தில், மனிதர்களிடம் இருந்து பிரிக்க முடியாத  ஒரு பொருளாக மொபைல் போன்கள் மாறிவிட்டது. இன்னமும் சொல்லப் போனால், மனிதனின் மூன்றாவது கையே இந்த மொபைல் போன் தான் எனும் நிலைக்கு வந்துவிட்டது. இப்படிப்பட்ட மொபைல் போன்கள் படிப்பதற்கும், படம் பார்ப்பதற்கும், ஆன்லைனில் உணவுப் பொருட்களை ஆர்டர் செய்வதற்கும் மற்றும் செய்திகளை பகிர்வதற்கும் என பலவற்றிற்கும் பயன்படுத்தப்படுகிறது.

மொபைல் போனில் பாக்டீரியா

இப்படியாக, நம் கையை விட்டுப் பிரியாத அளவிற்கு பயன்படுத்தும் மொபைல் போன்களில், முழுக்க முழுக்க பல பாக்டீரியாக்கள் கண்ணுக்குத் தெரியாமல் நிரம்பியுள்ளது என ஆய்வு முடிவு ஒன்று தெரிவித்துள்ளது. நாம் எங்கு சென்றாலும், மொபைல் போன்களை கையோடு எடுத்துச் செல்கிறோம். பல்வேறு சூழ்நிலைகளில் அவற்றை பொது இடங்களில் பயணிக்கும் போது, ஆங்காங்கே பல மேசைகள், பாக்கெட்டுகள், கைகள் மற்றும் பைகள் என பல இடங்களில் வைக்கிறோம். நாம் மொபைல் போனை வைக்கின்ற அனைத்து இடங்களிலும் பாக்டீரியாக்கள் அதிகளவில் நிரம்பியுள்ளன. அவை அனைத்துமே மொபைல் போனின் மேற்பரப்பிற்கு பரவுகின்றது.

Immunity: நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கச் செய்யும் யோகா முத்திரை இதுதான்!

ஆய்வு அறிக்கையின் முடிவுகள்

அரிசோனா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்களின் புதிய ஆய்வு அறிக்கை முடிவில், மொபைல் போன்களில் இருக்கும் பாக்டீரியாக்களின் அளவு குறித்து, அனைவரும் அதிர்ச்சியாகும் வகையில் ஒரு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆய்வு முடிவுகளின் அடிப்படையில், கழிவறை இருக்கைகளை விடவும், 10% அதிகமான பாக்டீரியாக்கள் மொபைல் போன்களில் உள்ளதாக  தெரிய வந்துள்ளது.

இள வயதினர் பயன்படுத்தும் மொபைல் போனில் குறைந்தபட்சம் 17,000 பாக்டீரியாக்கள் உள்ளது. இவை, சாதாரண கழிப்பறை இருக்கையை விடவும், 10 மடங்கு அதிகம் என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

தவிர்க்கும் முறைகள்

பாக்டீரியாக்களின் எண்ணிக்கையை குறைக்க, முதலில் கழிவறைக்கு மொபைல் போனை எடுத்துச் செல்வதை தவிர்க்க வேண்டும்.

ஆல்கஹால் அடிப்படையில் சுத்தம் செய்யும் திரவத்தைப் உபயோகப்படுத்தி, உங்களின் தொலைபேசியை மாதத்திற்கு ஒரு முறையாவது சுத்தம் செய்து கொள்ள வேண்டும்.

உங்கள் தொலைபேசியில் நேரடியாக திரவத்தை தெளிப்பதை தவிர்க்கவும். ஏனெனில் அது மொபைல் போனின் டிஸ்பிளேவை கெடுத்து விடும்.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios