அடிக்கடி மீல்மேக்கர் சாப்பிடும் ஆண்களே உஷார்..!! ஒளிந்திருக்கும் ஆபத்து..!!
சோயா பீன்ஸில் இருந்து பெறப்படும் மீல்மேக்கரை ஆண்கள் அதிகம் சாப்பிடக் கூடாது என்று மருத்துவ ஆதாரங்கள் வலியுறுத்துகின்றன. ஆண்கள் அடிக்கடி அல்லது அவ்வப்போது மீன்களை சாப்பிடுவதால் உடல் நலப் பிரச்சனைகள், விந்தணுக்கள் குறைபாடு மற்றும் மலட்டுத்தன்மை போன்ற பிரச்சினைகள் ஏற்படுவதாக சொல்லப்படுகின்றன
நாம் சாப்பிடும் உணவுப் பொருட்களில், குறிப்பிட்ட உணவுப் பொருளை எதிலிருந்து தயாரிக்கிறார்கள் என்பது கேள்விக்குறியாகவே இருந்து வருகிறது. எனினும் உணவு மீதான ஆசையில் குறிப்பிட்ட உணவு வகைகளின் பின்னணியை ஆராயாமல் சாப்பிட்டு விடுகிறோம். அப்படிப்பட்ட உணவுகளில் ஒன்று தான் மீல்மேக்கர். இந்தப் பொருள் எந்த உணவு பொருட்களில் இருந்து தயாரிக்கப்படுகிறது என்பது பலருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. அசைவ உணவுகளுக்கு இணையாக விரும்பி சாப்பிடப்படும் மீல்மேக்கர் சோயாபீன்ஸ் என்கிற பயிரில் இருந்து தயாரிக்கப்படுகிறது. எனினும் இது எப்படி தயாராகிறது? யாரெல்லாம் சாப்பிடலாம்? இதை சாப்பிடுவதால் உடலுக்கு கிடைக்கும் நன்மை என்ன? மீல்மேக்கரை ஆண்கள் சாப்பிடக்கூடாது என்று சொல்லப்படுவதன் காரணம் என்ன? அந்த காரணம் உண்மைதானா? உள்ளிட்ட விவரங்களை விரிவாக தெரிந்துகொள்ளலாம்.
மீல்மேக்கர் தயாரிக்கப்படும் முறை
சோயா பீன்ஸில் இருந்து தான் தயாரிக்கப்படுகிறது. முதலாவதாக சோயா பீன்ஸில் இருந்து சோயாபால் தயாரிக்கப்படும். அதிலிருந்து கிடைக்கும் கழிவுகளை வைத்து சோயா எண்ணெய் தயாரிக்கப்படும். அதற்கு அடுத்த நிலையில் இருக்கும் கழிவுகளை வைத்து தான் மீன்மேக்கர் தயாரிக்கப்படுகிறது. அதற்காக இது சக்கை என்று எண்ணிவிட வேண்டாம், இதில் அதிகப்படியான புரதம் இருக்கிறது. சைவ உணவுகளை விரும்பி சாப்பிடும் பல அசைவ உணவுகளை விரும்புவது கிடையாது. அதற்கு மாற்றாக சந்தையில் அறிமுகப்படுத்தப்பட்டது தான் மீல்மேக்கர். அசைவ உணவுகளை சமைப்பதற்கான ரெசிபிகளை வைத்து மீல்மேக்கரை சுவையாகவும் நாவூறும்படியும் தயார் செய்யலாம்.
மீல் மேக்கரில் இருந்து பெறப்படும் சத்துக்கள்
முன்னதாகவே குறிப்பிட்டதுபோல மீல் மேக்கரில் அதிகப்படியான புரதம் உள்ளது. அதனுடன் உடலுக்கு அடிப்படையாகத் தேவைப்படும் அமினோ அமிலங்களும் இதில் இடம்பெற்றுள்ளன. மனித உடல் அமினோ அமிலங்களை தானாக உருவாக்கிக் கொள்வது கிடையாது. நாம் சாப்பிடும் உணவுகளின் வழியாகத்தான் அது நமக்கு கிடைக்கிறது. அதனடிப்படையில் மீல்மேக்கரை சாப்பிடுவதன் மூலம் உடலுக்கு தேவையான அமினோ அமிலங்கள் நமக்கு கிடைக்கின்றன. இறைச்சிகளின் வழியாக கிடைக்கும் சத்துக்கள், சைவ உணவு சாப்பிடுபவர்களுக்கு கிடைப்பதில்லை. அமினோ அமிலங்கள் பெறுவதற்காக அவர்கள், மீல்மேக்கரை சாப்பிடலாம். இறைச்சி உணவில் இருந்து மாற வேண்டும் என்று நினைப்பவர்கள், மீல்மேக்கரை அதற்கு மாற்றாக சாப்பிட முயற்சிக்கலாம்.
மீல்மேக்கரின் வரலாறு
கடந்த 1980களில், தமிழகத்தில் நடைபெற்ற திருமணங்களில் மீல் மேக்கர் வெஜிடபிள் பிரியாணியில் முதன்முதலாக சேர்க்கப்பட்டது. அன்றைய காலகட்டத்தில் பெரும்பாலும் திருமண நிகழ்ச்சிகளில் பரிமாறப்பட்ட உணவுகளில் மட்டுமே காணப்பட்டன. இதனுடைய சுவை பிடித்து போனதை அடுத்து, சாதாரண மளிகைக் கடைகளில் விற்பனைக்கு வந்தன. அதையடுத்து மக்கள் அவ்வப்போது வாங்கி சமைக்க ஆரம்பித்தனர். ஆரம்பத்தில் வெஜிடபிள் பிரியாணியின் சுவையைக் கூட்டுவதற்காக மீல்மேக்கர் சேர்க்கப்பட்டது. பிறகு சைவ உணவுகளை விரும்புவோர் மத்தியில், இது பிரபலமானது. அதைத்தொடர்ந்து அசைவ உணவுக்கு மாற்றாக மீல்மேக்கர் உணவுகளில் கொண்டுவரப்பட்டது. செயல்முறைகளை மட்டும் வைத்துக்கொண்டு, சிக்கன்- மீன்- முட்டை- மட்டன் ஆகியவற்றுக்கு மாற்றாக அமைந்தது.
பெண்கள் கவனிக்க வேண்டிய 5 பொதுவான ஊட்டச்சத்து குறைபாடுகள்..!
இருதயத்துக்கு உறுதுணை செய்யும் மீல் மேக்கர்
சோயா பீன்ஸில் இருந்து மீல்மேக்கர் தயாரிக்கப்படுவதால் இருதய நலனுக்கு பல்வேறு வகையில் இது உறுதுணை செய்கிறது. மீல்மேக்கரை அளவாக எடுத்துக் கொள்வதன் மூலம் இருதய ஆற்றல் மேம்படுகிறது. அவ்வப்போது மீல்மேக்கரை உண்டு வருவதன் காரணமாக இரத்தக் குழாய்கள் இலகுவாக மாறும். ஒருவேளை உங்களுக்கு கொலஸ்ட்ரால் பாதிப்பு இருந்தால், அதை குறைத்து இரத்தக் குழாய்களில் அடைப்பு ஏற்படாமல் பாதுகாக்கும். இதில் இயற்கையாகவே ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் உள்ளன. இதனால் உடலில் ரத்த ஓட்டம் சீராக இருக்கும். மேலும் மீல்மேக்கரை வைட்டமின் ஏ போன்ற அத்தியாவசியமான சத்துக்கள் உள்ளன. இதன் காரணமாக உடலில் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.
தந்தையாவதற்கு சரியான வயது என்ன தெரியுமா?
மீல்மேக்கரை ஆண்கள் அதிகம் சாப்பிடக்கூடாது- காரணம்
பொதுவாக மீல்மேக்கர் சேர்க்கப்பட்ட உணவுகளை ஆண்கள் அதிகமாகவும் அடிக்கடியும் சாப்பிடக் கூடாது என்று சொல்லப்படுவதுண்டு. இதை மருத்துவர்கள் சிலரும் வலியுறுத்துகின்றனர். இதைத் தொடர்ந்து அதிகமாக சாப்பிட்டு வருவோருக்கு உடலில் பாதிப்பு ஏற்படுகிறது. குறிப்பாக ஆண்கள் மீல்மேக்கரை அதிகம் சாப்பிடுவதால் அவர்களுக்கு ஹார்மோன் மாற்றங்கள் ஏற்படுவதாக மருத்துவ ஆய்வுகள் குறிப்பிடுகின்றன. மலட்டுத்தன்மை, விந்தணுக்கள் குறைபாடு உள்ளிட்ட பிரச்சினைகளும் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளன. ஆனால் முடிந்த வரையில் ஆண்கள் மீல்மேக்கரை அளவுடன் சாப்பிடவேண்டும் என்பது மருத்துவர்களின் அறிவுரையாக உள்ளது