Men facing these problems after 35 years
புரோஸ்டேட்புற்றுநோய்அபாயம்
சில ஆண்களிடம், 35 வயதுக்கு மேல் தான் புரோஸ்டேட் புற்றுநோயின் அறிகுறிகள் தென்படுகிறது. சிறிநீர் கழிக்கும் போது வலி, ஆண்மை குறைபாடு, இரவில் அடிக்கடி சிறுநீர் கழித்தல் போன்றவை இதன் அறிகுறிகளாக கூறப்படுகிறது. இவை, புரோஸ்டேட் புற்றுநோய்க்கான அறிகுறிகள் மட்டும் அல்ல, சாதாரண தொற்றாக கூட இருக்கலாம். ஆனால், பரிசோதனை செய்துக் கொள்வது நல்லது.
தசைவலுஇழப்பு
35 வயதிற்கு மேல் ஆண்களிடம் தசை வலு இழப்பு ஏற்படலாம். இதற்கான ஒரே தீர்வு உடற்பயிற்சி, யோகா போன்றவற்றில் ஈடுபடுதல் தான்.
எலும்புதேய்மானம்ஏற்படுதல்
பெண்கள் மட்டுமின்றி இப்போது ஆண்களின் மத்தியிலும் எலும்பு தேய்மான பிரச்சனை அதிகம் ஏற்படுகிறது. இதற்கு இரண்டு முக்கிய காரணங்கள், உட்கார்ந்தே வேலை செய்வது, அதிகம் சோடா பானங்கள் குடிப்பது.
உடல்எடைஅதிகரித்தல்
இடுப்பை சுற்றி டயரை கட்டி கொண்டு திரிவது அதிகமாகலாம். 35 வயதிற்கு மேல் தான் ஆண்களுக்கு அதிகம் தொப்பை அதிகரிக்கிறது. இது தான் இதய பிரச்சனை, நீரிழிவு போன்றவை ஏற்படவும் காரணமாக இருக்கிறது.
மனஅழுத்தம்
குழந்தை, இல்லறம், படிப்பு செலவு என 35 வயதிற்கு மேல் தான் பண நெருக்கடி ஆண்களுக்கு ஏற்படுகிறது. இதனால தான் நிறைய ஆண்கள் மன அழுத்தத்திற்கு உள்ளாகின்றனர்.
இதயபாதிப்புகள்
இதயத்தை கவனிக்க வேண்டிய காலம் இங்கிருந்து தான் தொடங்குகிறது. இரத்த கொதிப்பு, இரத்த கொழுப்பு, இரத்த சர்க்கரை அளவு என இதயம் சார்ந்த பிரச்சனைகள் அதிகரிக்க வாய்ப்பிருக்கிறது. எனவே, சரியான உணவு முறையை பின்பற்றி உங்கள் இதயத்தை நீங்கள் தான் கவனித்துக் கொள்ள வேண்டும்.
டெஸ்டோஸ்டிரோன்அளவு
டெஸ்டோஸ்டிரோன் அளவு ஆண்களுக்கு 35 வயதில் இருந்து தான் குறைய ஆரம்பிக்கிறது. இது மெல்ல மெல்ல, இல்லற வாழ்க்கையை பாதிக்கலாம். இதனால் மன அழுத்தம் ஏற்பட கூட வாய்ப்பிருக்கிறது.
விதைபுற்றுநோய்
35 வயதுக்கு மேல் ஆண்களுக்கு ஏற்பட கூடிய அபாய தாக்கங்களில் ஒன்று விதை (Testicular) புற்றுநோய். விதையில் வலி ஏற்படுவது இதன் அறிகுறியாக கருதப்படுகிறது. வலி ஏற்படுவது போன்று உணர்ந்தால், உடனே பரிசோதனை செய்துக் கொள்ள வேண்டியது அவசியம்.
