Medicinal properties in these three substances can improve our heart health ...
எலுமிச்சை பூண்டு மற்றும் தேன் ஆகிய மூன்று பொருட்களில் உள்ள மருத்துவ குணங்கள் நம் இதயத்தின் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதில் முக்கிய பங்கினை வகிக்கிறது. எனவே அன்றாடம் இந்த மூன்று பொருட்களையும் நாம் சாப்பிடும் உணவில் அதிகமாக சேர்த்து சாப்பிட்டு வந்தால், நமது வாழ்நாள் முழுவதும் இதயத்தின் ஆரோக்கியத்தை பாதுகாக்கலாம்.
இந்த மூன்று பொருட்களை இப்படியும் சாப்பிடலாம்...
தேவையான பொருட்கள்
பூண்டு சாறு – 1 கப்
எலுமிச்சை சாறு – 1 கப்
ஆப்பிள் சீடர் வினிகர் – 1 கப்
இஞ்சிச் சாறு – 1 கப்
தேன் – 3 கப்
செய்முறை
** பூண்டு சாறு, எலுமிச்சை சாறு, ஆப்பிள் சீடர் வினிகர் மற்றும் இஞ்சி சாறு ஆகிய அனைத்தையும் ஒரு பாத்திரத்தில் போட்டு அரை மணி நேரம் வரை நன்கு கொதிக்க வைக்க வேண்டும்.
** பின் இந்த பானம் ஆறியவுடன் அதில் மூன்று கப் தேனை சேர்த்து நன்றாக கலந்து, ஒரு கண்ணாடி ஜாரில் எடுத்து குளிர்சாதனப்பெட்டியில் வைக்க வேண்டும்.
குடிக்கும் முறை
இந்த பானத்தை தினமும் காலையில் உணவு சாப்பிடுவதற்கு முன் இதில் ஒரு ஸ்பூன் எடுத்து சாப்பிட்டு வர வேண்டும்.
நன்மைகள்
** பூண்டு, தேன் மற்றும் எலுமிச்சை கலந்த இந்த பானத்தில் ஆரோக்கிய சத்துக்கள் அதிகமாக உள்ளது. இதை தினமும் குடித்து வந்தால், ரத்தத்தில் உள்ள கொழுப்பை குறைத்து, இரத்த ஓட்டத்தை சீராக்கி, இதயத்தின் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.
