Asianet News TamilAsianet News Tamil

உங்களுக்குத் தெரியுமா? வெந்தயம் சாப்பிடுவதால் உடல் எடை குறையும்...

Medical benefits of vendayam
Medical benefits of vendayam..
Author
First Published Mar 6, 2018, 1:17 PM IST


 

வெந்தயத்தின் மருத்துவ குணங்கள்...

வெந்தயத்தில் கேலக்டோமேனன்  என்கிற நீரில் கரையக்கூடிய கார்போஹைட்ரேட் அதிகமாக உள்ளது. இந்த வேதிபொருள் பசியை கட்டுப்படுத்துகின்றது. அதன் காரணமாக நாம் பசியை உணர மாட்டோம். அதன் விளைவாக் நம் உடலில் தேங்கியுள்ள அதிகமான கலோரிகள் எரிக்கப்பட்டு நம்முடைய உடல் எடை கட்டுப்படுத்தப்படுகின்றது. 

கொழுப்பு எரிக்கப்படும்

வெந்தயத்தில் உள்ள கேலக்டோமேனன் உங்களின் கொழுப்பு மற்றும் சர்க்கரையின் வளர்சிதை மாற்றத்தை சீராக்குகின்றது. அதன் காரணமாக உங்கள் உடலில் உள்ள அதிகப் படியான கலோரிகள் மற்றும் கொழுப்புகள் எரிக்கப்பட்டு உங்களின் உடல் எடை குறைகின்றது.

வயிறு நிரம்பும் :

வெந்தயத்தை உட்கொள்ளும் பொழுது நம்முடைய வயிறு எப்பொழுதும் முழுவதுமாக நிரம்பி இருக்கின்றது என்கிற உணர்வு நமக்கு ஏற்படுகின்றது. அதன் காரணமாக நமக்கு பசி எடுப்பதில்லை.

மலச்சிக்கல் :

வெந்தயத்தில் உள்ள நார் பொருட்கள் மலச்சிக்கல் பிரச்சினைகளை சமாளிப்பதற்கு உதவுகிறது. மேலும் இது உடலின் வளர்சிதை மாற்ற விகிதத்தை அதிகரிக்கிறது. இதன் காரணமாக உடலில் உள்ள அதிகப்படியான கொழுப்பு குறிப்பாக வயிற்றுப் பகுதியில் உள்ள கொழுப்பு எரிக்கப்படுகின்றது.

Follow Us:
Download App:
  • android
  • ios