medical benefits of Spinach

அந்தக் காலத்தில் எல்லா வீடுகளிலும் மூலிகைகள் இருக்கும். தற்போது, பெருநகரங்களில் குடியிருப்பதற்கே சிறிய வீடுதான். இடப்பற்றாக்குறை காரணமாக மூலிகை வளர்ப்பில் ஆர்வம் காட்டுவது இல்லை. 

ஆனால், மக்கள் நினைப்பது போலச் செடிகளை வளர்ப்பதற்கு வீட்டின் முன்பாகவோ அல்லது பின்புறத்திலோ நிறைய இடவசதி தேவை இல்லை. சாதாரணப் பூந்தொட்டிகளில்கூடச் சில முக்கியமான மூலிகைகளை வளர்க்க முடியும். 

காய்ச்சல், தலைவலி, சிறிய காயம் போன்ற சின்னச் சின்ன உபாதைகளுக்கு மருத்துவமனைக்கு ஓட வேண்டிய அவசியம் இருக்காது. அதனால் வீட்டுக்கு ஒரு மூலிகையாவது இருந்தால் நோய்களில் இருந்து தப்ப முடியும்

1.. கொத்தமல்லி கீரை: 

மூளை, மூக்கு சம்பந்தமான சகல வியாதிகளும் குணமாகும். பசியைத் தூண்டும்.

2.. அரைக்கீரை: 

நரம்பு தளர்ச்சியை போக்கும். தாய்ப்பால் பெருகும்.

3.. வள்ளாரை: 

நினைவாற்றலை அதிகமாகும். யானைக்கால் நோய் குணமாகும்.

4.. அகத்திக்கீரை: 

மலச்சிக்கலைப் போக்கும்.

5.. முளைக்கீரை: 

பல் சம்பந்தமான வியாதிகளை குணமாக்கும்.

6.. பொன்னாங்கன்னி: 

இரத்தம் விருத்தியாகும்.

7.. தர்ப்பைப் புல்: 

இரத்தம் சுத்தமாகும். கஷாயம் வைத்து பருகவும்.

8.. தூதுவளை: 

மூச்சு வாங்குதல் குணமாகும்.

9.. முருங்கை கீரை: 

பொறியல் செய்து நெய்விட்டு 48 நாட்கள் சாட்பபிட தாது விருத்தியாகும்.

10.. சிறுகீரை: 

நீர்கோவை குணமாகும்.

11.. வெந்தியக்கீரை: 

இருமல் குணமாகும்

12.. புதினா கீரை: 

மசக்கை மயக்கம், வாந்தி குணமாகும்.