Medical benefits of aagayathamarai
தோல்நோய்களை போக்க கூடியதும், மூலநோய்க்கு மருந்தாக அமைவதும், சிறுநீர் தாரையில் உண்டாகும் தொற்றுக்களை போக்கவல்லது “ஆகாயத்தாமரை”.
1.. நுண்கிருமிகள், நோய் கிருமிகளை அழிக்க கூடிய ஒன்றாக விளங்குகிறது. தோல் நோய்க்கு மருந்தாகிறது.
2.. காய்ச்சலை தணிக்கிறது. புற்றுநோய் வராமல் தடுக்கிறது. வீக்கத்தை கரைக்கும் தன்மை உடையது.
3.. ஆகாய தாமரை இலைகளை பயன்படுத்தி கழிச்சல், சீதக்கழிச்சல், ரத்த மூலம், சிறுநீரோடு ரத்தம் கலந்து வெளியேறுவதை குணப்படுத்தும் மருந்து தயாரிக்கலாம்.
தேவையான பொருட்கள்:
வெண்ணெய் அல்லது பசு நெய், ஆகாய தாமரை இலை.
செய்முறை:
வெண்ணெய் அல்லது பசு நெய் அரை ஸ்பூன் அளவுக்கு எடுக்கவும். இதனுடன் ஒரு ஸ்பூன் ஆகாயத்தாமரை இலை பசை சேர்க்கவும். பச்சை வாடை போகும் வரை கொதிக்க வைக்கவும்.
பலன்:
இதை குடித்துவர கழிச்சல், ரத்தமூலம், சிறுநீரோடு ரத்தம் கலந்து செல்வது குணமாகும். சிறுநீரகத்தை தாக்கும் புற்று நோயை தடுக்கும்.
4.. ரத்தத்தை உறைய வைக்கும் தன்மை கொண்ட ஆகாயத்தாமரையை பயன்படுத்தி சர்க்கரை நோய், தோல் நோய்களுக்கான மருந்து தயாரிக்கலாம்.
தேவையான பொருட்கள்:
மஞ்சள் பொடி, ஆகாயத்தாமரை இலை.
செய்முறை:
மஞ்சள் பொடி ஒரு ஸ்பூன் அளவுக்கு எடுக்கவும். இதனுடன் 100 மில்லி ஆகாயத்தாமரை சாறு சேர்த்து நீர்விட்டு கொதிக்க வைக்கவும்.
பலன்
இதை குடித்துவர ரத்தத்தில் சர்க்கரையின் அளவு குறையும். சிறுநீர் தாரையில் ஏற்படும் தொற்று குணமாகும்.
5. ஆகாயத்தாமரையின் இலைகள் உள், வெளி மருந்தாகி பயன்தருகிறது. பல்வேறு நன்மைகளை கொண்ட ஆகாயத்தாமரையை பயன்படுத்தி உடல் நலம் பெறலாம். படிகாரத்தை பொடித்து எடுத்து, சிறிது சுண்ணாம்பு சேர்த்து நன்றாக கலக்கி வண்டுக்கடி, தேள் கடி உள்ள இடத்தில் பூசினால் வலி விலகும். வீக்கம் கரையும். விஷம் முறியும்.
