எந்தெந்த உணவுகள் உடல் சூட்டை அதிகரிக்கும் என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

நாம் சாப்பிடும் உணவுகள் நம்முடைய உடலில் சில சமயங்களில் ஒருவிதமான தாக்கத்தை ஏற்படுத்தும். அதிலும் சில உணவுப் பொருட்கள் உடலில் சூட்டை ஏற்படுத்தி விடும். உடல் வெப்பநிலை அளவுக்கு அதிகமானால் பல உடல்நல பிரச்சனைகள் உண்டாகும். எனவே இந்த பதிவில் எந்தெந்த உணவுகள் உடல் சூட்டை அதிகரிக்கும் என்பதை தெரிந்து கொள்ளலாம்.

உடல் சூட்டை அதிகரிக்கும் உணவுகள் : 

  1. வெங்காயம் மற்றும் பூண்டு :

பூண்டு மற்றும் வெங்காயம் உடலில் வெப்பநிலை அதிகரிக்கும் என்று ஆயுர்வேதம் சொல்கிறது. எனவே, இதைக் கோடை காலத்தை விட குளிர்காலத்தில் அதிகமாக எடுத்துக் கொள்வது நல்லது.

2. வேர் காய்கறிகள் :

உருளைக்கிழங்கு, சர்க்கரைவள்ளி கிழங்கு, கேரட் போன்ற வேர் காய்கறிகள் உடல் சூட்டை அதிகரிப்பதாக சொல்லப்படுகின்றது. ஏனென்றால் இந்த காய்கறிகள் செரிமானம் அடைவதற்கு அதிக ஆற்றல் தேவைப்படும். இதனால் உடல் சூடு அதிகரிக்கும். எனவே இந்த வகையான காய்கறிகளை குளிர்காலத்தில் சாப்பிடுவது ஏற்றது.

3. சூடான பானங்கள் :

இயற்கையாகவே சூடான பானங்கள் உடலில் வெப்பநிலையை அதிகரிக்க செய்யும். ஆனால் இது உடலுக்கு நல்லது என்று ஊட்டச்சத்து நிபுணர்கள் கூறுகின்றனர். ஆனால் கோடை காலத்தில் இது குறித்து கவனமாக இருக்க வேண்டும்.

4. இந்த கிச்சன் பொருட்கள் :

மிளகு, பச்சை மிளகாய், இஞ்சி போன்றவை உடலில் வெப்பநிலையை அதிகரிக்கும். இவற்றை அளவுக்கு அதிகமாக சாப்பிட்டால் மோசமான விளைவுகளை ஏற்படுத்தும்.

5. பிரக்கோலி மற்றும் பசலைக்கீரை :

பீன்ஸ், பிரக்கோலி, பசலை கீரை போன்றவை ஆரோக்கியத்திற்கு நல்லது என்றாலும், உடல் சூட்டை அதிகரிக்கும். எனவே இவற்றை மிதமான அளவில் எடுத்துக் கொள்ளுங்கள். இல்லையெனில் பெரும் பிரச்சனையை சந்திக்க நேரிடும்.

6. பழங்கள் ;

வாழைப்பழம், ஆரஞ்சு, பிளம்ஸ் பீச், ஆப்பிள் போன்ற பழங்கள் உடல் சூட்டை அதிகரிக்கும் பழங்களாக கருதப்படுகிறது. இவற்றை அளவுக்கு அதிகமாக சாப்பிட்டால் அது உடல் சூட்டை அதிகரிப்பதோடு மட்டுமல்லாமல், வயிற்றில் எரிச்சலை ஏற்படுத்தும்.

7. நட்ஸ் வகைகள் :

வால்நட்ஸ், முந்திரி, பாதாம், பிஸ்தா வேர்க்கடலை போன்ற நட்ஸ் வகைகள் தினமும் சாப்பிடுவது ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும். ஆனால் அதை அளவுக்கு அதிகமாக சாப்பிட்டால் உடல் சூட்டால் அவஸ்தைப்படுவீர்கள்.

8. இந்த உணவுகளும் அடங்கும் ..

சீஸ், புளித்த க்ரீம், சிக்கன், முட்டை, மீன், பருப்பு வகைகள், வெண்ணெய், கத்தரிக்காய், முள்ளங்கி, ஆலிவ், குடைமிளகாய், தக்காளி, காராமணி, கைக்குத்தல் அரிசி போன்றவையும் உடல் சூட்டை அதிகரிக்கும். எனவே வெயில் காலத்தில் இவற்றை அதிகமாக சாப்பிடுவதை தவிர்ப்பது நல்லது. இல்லையெனில் உடல் சூட்டால் கஷ்டப்படுவீர்கள்.