Asianet News TamilAsianet News Tamil

முடி சம்மந்தமான அனைத்து பிரச்சனைக்கும் ஒரே தீர்வு “கொய்யா இலை”…

Koyya ilai is remedy for hair problems
koyya ilai-is-remedy-for-hair-problems
Author
First Published Apr 3, 2017, 2:06 PM IST


 

முடி உதிர்தல், பொடுகுத் தொல்லை மற்றும் முடி வெடிப்பு உள்பட அனைத்து முடி சம்மந்தமான பிரச்சனைகளுக்கும் உடனடி தீர்வளிக்கும் குணம் கொண்டது கொய்யா இலை. இதற்கு காரணம் கொய்யா இலையில் உள்ள கசப்புத்தன்மை.

முடி உதிர்தல்

உங்களுக்கு முடி அதிகம் கொட்டினால், கொய்யா இலையை இரவில் படுக்கும் போது நீரில் ஊற வைத்து, மறுநாள் காலையில் அவற்றைக் கொண்டு தலையை அலசுங்கள். இதனால் அதில் உள்ள வைட்டமின் சி சத்தினால், மயிர்க்கால்கள் வலிமையுடன் இருக்கும்.

பொடுகுத் தொல்லை

பொடுகுத் தொல்லையால் அவஸ்தைப்படுபவர்கள், கொய்யா இலையை அரைத்து பொடி செய்து, நீரில் கலந்து, ஸ்கால்ப்பில் படும்படி தடவி 15 நிமிடம் ஊற வைத்து, பின் வெதுவெதுப்பான நீரில் தலையை அலச வேண்டும். இப்படி செய்து வந்தால், அதில் உள்ள கசப்புத்தன்மையினால் பொடுகை உண்டாக்கும் பாக்டீரியாக்கள் அழிக்கப்பட்டு, பொடுகுத் தொல்லையில் இருந்து விடுபடலாம்.

முடி வெடிப்புக்கள்

முடியின் முனைகளில் வெடிப்புக்கள் அதிகம் இருந்தால், முடியின் வளர்ச்சி தடைப்படும். எனவே முடி வெடிப்புக்களைத் தடுப்பதற்கு, கொய்யா இலையை அரைத்து பேஸ்ட் செய்து, கூந்தலில் தடவி சிறிது நேரம் ஊற வைத்து, பின் வெதுவெதுப்பான நீரில் அலச வேண்டும்.

பேன் தொல்லை

எப்போதும் தலையை சொறிந்து கொண்டே இருக்கிறீர்களா? பேன் தலையில் அதிகமாகிவிட்டதா? கவலையை விடுங்கள். கொய்யா இலையின் சாறு பேன்களை அழித்து வெளியேற்றிவிடும். அதற்கு கொய்யா இலையின் சாற்றினை வாரம் ஒரு முறை தலையில் தடவி ஊற வைத்து அலச வேண்டும். இப்படி செய்து வந்தால், பேன் தொல்லையில் இருந்து விடுபடலாம்.

வறட்சியான ஸ்கால்ப்

தலையில் அரிப்பு ஏற்படுவதற்கு காரணம் பேன் அல்லது வறட்சியான ஸ்கால்ப் கூட இருக்கலாம். இப்படி ஏற்படும் அரிப்பிற்கு கொய்யா இலையின் சாற்றினை வாரம் ஒருமுறை ஸ்கால்ப்பில் படும்படி தடவி ஊற வைத்து அலச வேண்டும்.

எண்ணெய் பசையான கூந்தல்

உங்கள் தலையில் எண்ணெய் பசை அதிகம் இருந்தால், கொய்யா இலை அதற்கு நல்ல தீர்வளிக்கும். அதற்கு கொய்யா இலையை சுடுநீரில் 20 நிமிடம் ஊற வைத்து, பின் அந்த நீரைக் கொண்டு தலை முடியை அலச வேண்டும். இப்படி செய்வதால், தலை முடி சுத்தமாவதோடு, அதிகப்படியான எண்ணெயும் நீங்கும்

Follow Us:
Download App:
  • android
  • ios