தூக்கமின்மை இதயத்தை பாதிக்கும்.. ! குறிப்பாக பெண்கள்..ஏன் தெரியுமா?

நாம் இரவு சரியாக தூங்கவில்ல்லை என்றால் நம் இதயம் பாதிக்கும் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். அதிலும் குறிப்பாக பெண்கள். அது ஏன் தெரியுமா?..

know sleeping less increase the risk of heart disease in tamil mks

கொலம்பியா பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வில் தூங்கும் நேரத்தில் ஏற்படும் மாற்றங்கள் இதயத்தில் தாக்கத்தை ஏற்படுத்துவதாக தெரியவந்துள்ளது. நாம் உறங்கும் போது விரல்களில் ஏற்படும் மாற்றங்கள் இதயத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். அமெரிக்காவின் கொலம்பியா பல்கலைக்கழகம் நடத்திய இந்த ஆய்வில், அனைவரும் 7 முதல் 9 மணி நேரம் வரை தூங்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.மேலும், கொலம்பியா பல்கலைகழகமும் நள்ளிரவில் கண் விழிப்பது குறித்து ஆய்வு செய்துள்ளது. தூங்கும் நேரத்தில் சிறிய வித்தியாசம் ஏற்பட்டாலும் உடல்நலக் கோளாறுகள் ஏற்படும் என இந்த ஆய்வு தெரிவிக்கிறது.

know sleeping less increase the risk of heart disease in tamil mks

பிரச்சினைகளை தவிர்க்க என்ன செய்ய வேண்டும்:
உடல்நலப் பிரச்சினைகளைத் தவிர்ப்பதற்கு ஒரு நல்ல இரவு தூக்கம் முற்றிலும் அவசியம். தூக்கத்தின் நடுவில் எழுவது போன்ற தூக்க நேரத்தில் ஏற்படும் சிறிய மாற்றங்கள் கூட இதயத்தில் பாதிப்பை ஏற்படுத்தும் என்கின்றனர் ஆய்வாளர்கள். 

இதையும் படிங்க:  வாங்க இரவு முழுவதும் பேசலாம்! சில பெண்களுக்கு இந்த 3 காரணத்தினால் இரவில் தூங்குவதில்லையாம்...!!

கொலம்பியா பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வில், 35 ஆரோக்கியமான பெண்கள் தூங்கும் நேரம் குறித்த ஆய்வில் பங்கேற்றுள்ளனர்.12 வாரங்கள் அவர்களை ஆய்வு செய்த நிபுணர்கள், தூக்க நேர மாற்றம் அவர்களின் இதயத்தில் பாதிப்பை ஏற்படுத்தியதாக தெரிவித்துள்ளனர். 12 வாரங்களாக அவர்களைப் பரிசோதித்த வல்லுநர்கள் அவர்களுக்கு ஸ்லீப் டிராக்கர்களைக் கொடுத்து, அவர்களின் உடல்நிலையை அவ்வப்போது கண்காணித்தனர்.

இதையும் படிங்க:  தூக்கமின்மையை சாதாரணமாக எடுக்க கூடாது. ஏன்?

know sleeping less increase the risk of heart disease in tamil mks

ஆனால் அவர்களின் ஆய்வின்படி, 12 வாரங்களில் முதல் 6 வாரங்கள்.. 35 பெண்களுக்கு முற்றிலும் ஆரோக்கியமான தூக்கம் இருந்தது. அடுத்த 6 வாரங்களுக்கு, அவர்கள் தூங்கும் நேரத்தில் சிறிய மாற்றங்கள் இருந்தன. அவர்கள் வழக்கமாக உறங்கும் நேரத்தை விட ஒரு மணிநேரம் அல்லது இரண்டு மணி நேரம் கழித்து உறங்கச் சென்றார்கள். இது அவர்களின் இதய ஆரோக்கியத்தில் சிறிதளவு பாதிப்பை ஏற்படுத்தியிருப்பதை ஆய்வாளர்கள் கவனித்தனர். உறங்கும் நேரத்தில் அடிக்கடி ஏற்படும் மாற்றங்கள் நிச்சயம் உங்களை நோய்வாய்ப்படுத்தும் என்று கொலம்பியா பல்கலைக்கழகம் கூறுகிறது. மற்றொரு NHS ஆய்வின்படி, அனைவரும் ஏழு முதல் ஒன்பது மணி நேரம் தூங்க வேண்டும்.

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios