இஞ்சி 

`இஞ்சுதல்’ என்றால் நீரை உள்ளிழுத்தல் என்று பொருள். `சுவறுதல்’ அல்லது `உறிஞ்சுதல்’ என்றும் பொருள்கொள்ளலாம். இஞ்சி என்றால், `கோட்டை மதில்’ என்றும் சொல்லப்படுகிறது. இவற்றிலிருந்து `இஞ்சி’ என்ற பெயர் வந்திருக்கலாம்.

இதற்கு `அல்லம்’, `ஆசுரம்’, `ஆத்திரகம்’, `ஆர்த்திரகம்’, `கடுவங்கம்’ என வேறு பெயர்களும் உள்ளன. மருத்துவக்குணம் நிறைந்த தாவரமான இது, பூமிக்குக் கீழே விளையும் சிறந்த நறுமணப்பொருள்.

இஞ்சி, கொத்தமல்லி, கறிவேப்பிலை… இவை மூன்றும் சமையல் அறையில் இணை பிரியாத நண்பர்கள் என்று சொல்லப்படுகிறது. தமிழ்நாட்டுச் சமையலில் இதற்கு முக்கிய இடம் உண்டு. இஞ்சியை துவையல், குழம்பு, பச்சடி, கஷாயம், ஜூஸ் எனப் பலவிதங்களில் உணவில் சேர்த்துக்கொள்வதன் மூலம் பலன் கிடைக்கும்.

** ரத்த அழுத்தம், தலைசுற்றல், படபடப்பு மற்றும் இதயக்கோளாறுகளுக்கு இது நல்ல மருந்து. 

** இதன் சாறு எடுத்து, வடிகட்டி, சிறிதுநேரம் கழித்து அதன் தெளிந்த நீரை எடுத்து தேன் சேர்த்துக் குடித்துவந்தால், குறைந்த ரத்த அழுத்தம் இயல்புநிலைக்குத் திரும்பும். 

** இதை டீயில் சேர்த்தும் அருந்தலாம். இஞ்சிச் சாற்றுடன் எலுமிச்சைச் சாறு சேர்த்து தேன், சர்க்கரை கலந்தால் ஜூஸ் ரெடி. இதுவும் உடல்நலத்துக்கு நல்லது.

** இஞ்சிச் சாறு உடலின் மெட்டபாலிசத்தின் அளவை அதிகரிக்கும். உடலில் மெட்டபாலிசத்தின் அளவு அதிகமானால் கலோரிகள் எரிக்கப்பட்டு உடல் எடை குறைந்துவிடும். எனவே இதை வெறும் சாறாகவோ, ஜூஸ் செய்தோ அருந்திவந்தால் எளிதாக உடல் எடை குறையும். 

** ஆஸ்துமா நோயாளிகள் இதை அருந்தினால், நுரையீரலுக்குள்ள் செல்லக்கூடிய ரத்தநாளங்கள் ரிலாக்ஸ் ஆகி, ரத்த ஓட்டம் சீராகும்; சுவாசப் பிரச்னைகள் நீங்கும். 

** மேலும், புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்கள் அருந்தினால், இதில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட் புற்றுநோய் செல்களின் வளர்ச்சியைத் தடுத்துவிடும்.